மேலும் அறிய

ஆந்திராவில் சிறுவர்கள் காரை ஓட்டி விபரீதம்.. அடித்துத் தூக்கி விபத்து.. பதறவைத்த காட்சிகள்..

ஆந்திராவில் சிறுவர்கள் காரை தாறுமாறாக ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ளனர். சாலை.. பணக்காரர்களுக்கு பயணப்பாதை மட்டும்தான் ஆனால் பரம ஏழைகள் பலருக்கும் அதுவே வாழ்விடம்.

ஆந்திராவில் சிறுவர்கள் காரை தாறுமாறாக ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
சாலை.. பணக்காரர்களுக்கு பயணப்பாதை மட்டும்தான் ஆனால் பரம ஏழைகள் பலருக்கும் அதுவே வாழ்விடம்.

பெரும்புள்ளிகளும் அவர்கள் வீட்டின் கொழுத்த கன்றுக்குட்டிகளும் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி ஏற்படுத்தும் விபத்துகளுக்கு ஆண்டுதோறும் பலியாவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. மனிதன் படத்தில் நீதிமன்ற காட்சியில் வழக்கறிஞராக நடித்துள்ள உதயநிதி வைக்கும் ஒவ்வொரு வாதமும் சமூகத்தின் முகத்தில் அறையும் வகையறா. ஆனால் அத்தகைய கார் விபத்துகள் தான் குறையவில்லை.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ளது தெனாலி நகரம். இங்குதான் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. தெனாலி டவுனில் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் சாலையில் மூன்று பேர் ரிக்‌ஷாவை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மூன்று சிறார்கள் ஒரு காரில் வந்தனர். அந்த கார் தாறுமாறாக ஓடியது. சாலையில் இருந்தோர் பலரும் ஏதோ அசம்பாவிதத்தை கணித்திருக்க வேண்டும். அப்போது அந்த கார் சாலையில் ரிக்‌ஷாவை பழுது நீக்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் மூவரும் படுகாயமடைந்தனர். ஒருவரின் கால் சம்பவ இடத்திலேயே துண்டானது. மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தெனாலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சல்மான் கான் வழக்கு:
ரேஷ் டிரைவிங் கார் விபத்து வழக்கு என்றாலே சல்மான் கானின் லேண்ட் க்ரூய்ஸர் கார் வழக்கை நினைவு கொள்ளாமல் இருக்க முடியாது. 

கடந்த 2002 ஆம் ஆண்டு மும்பை பாந்த்ரா பகுதியில் இந்தி நடிகர் சல்மான் கான் தாறுமாறாக காரை ஓட்டியதில் சாலையோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது கார் ஏறியது.  சல்மான்கான் ஓட்டி வந்த டொயாட்டோ லேண்ட் குரூசர் கார், தாறுமாறாக ஓடி நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் மும்பை அமர்வு நீதிமன்றம் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. ஆனால் சல்மான் கான் தரப்பிலிருந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

சட்டம் அவருக்கு சாதகமானது. நடிகர் சல்மான் கான் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். 2002 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு 13 ஆண்டுகளுக்குப் பின்னர் 2015 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு சல்மான் கான் அன்று விடுதலையானார். குற்றத்தை நிரூபிக்க தவறிவிட்டதால் அவர் விடுதலையானார். ஆனால், இன்னமும் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சொகுசுக் காருக்குள் இருந்து பார்ப்பவர்களுக்கு பிற உயிர்கள் எப்படித் தெரியும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது போல!

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget