மேலும் அறிய

Lockdown: மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கா? - மத்திய அமைச்சர் பரபரப்பு விளக்கம்!

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் பதற்றம் காரணமாக உலக நாடுகளில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

மேற்காசிய போர் தீவிரமடைந்து வரும் நிலையில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் பெரும்பான்மையான மாதங்கள் கொரோனா நோய்தொற்று காரணமாக முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு பொருளாதாரமும் அடியோடு சரிந்தது. இதனால் ஊரடங்கு என்ற வார்த்தையை கேட்டாலே நம்மை அறியாமல் அச்சம் தொற்றிக் கொள்கிறது. அப்படியான நெருக்கடியில் இருந்து மக்கள் 5 ஆண்டுகளை கடந்தும் இன்னும் முழுமையாக மீளவில்லை. 

இப்படியான நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் பதற்றம் காரணமாக உலக நாடுகளில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு இந்தியாவில் நிலவுவதை மத்திய அரசு உறுதி செய்த நிலையில் அதனை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் பெட்ரோல், டீசல் கிடைக்காது என்ற தகவலும் காட்டு தீயாய் பரவ பெட்ரோல் நிலையங்களில் மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். 

இப்படி படிப்படியாக போரால் இந்தியாவில் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் தகவல்கள் பரவி வரும் நிலையில், அடுத்ததாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டு வருகிறது. அடுத்த 3 மாதங்களுக்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் என்றும், எரிபொருள் கிடைக்காது எனவும் சொல்லப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 

இந்த நிலையில் இன்று மாலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை மேற்காசிய போர் தீவிரமடைந்தால் நிலைமையை கையாள என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. இதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன், இந்திய அரசாங்கத்தால் அத்தகைய எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை.  இதுபோன்ற காலங்களில், நாம் அமைதியாகவும், பொறுப்புடனும், ஒற்றுமையுடனும் இருப்பது முக்கியம்.  எரிசக்தி மற்றும் எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றித் தொடர மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதால், இந்தியாவின் எரிசக்தி நிலைமை பாதுகாப்பாக உள்ளது. உருவாகும் சவால்களைச் சமாளிக்க நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
Ration Shop : மொத்தமாக மாறப்போகும் ரேஷன் கடைகள்! இனி சக்கரை, பருப்பு பாக்கெட்டில் – எப்போது தொடக்கம்?
மொத்தமாக மாறப்போகும் ரேஷன் கடைகள்! இனி சக்கரை, பருப்பு பாக்கெட்டில் – எப்போது தொடக்கம்?
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Toyota Urban Cruiser Hyryder: விற்பனையில் மிரட்டும் ஹைப்ரிட் காரில் இவ்ளோ குறைகளா? யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
விற்பனையில் மிரட்டும் ஹைப்ரிட் காரில் இவ்ளோ குறைகளா? யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
Embed widget