தாண்டியா ஆடிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பு... சுருண்டு விழுந்து உயிரிழந்த நபர்... அதிர்ச்சி சம்பவம்!
தாண்டியா ராஸ் நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போதே நபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் தாண்டியா நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போதே ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனம் தாண்டியா ராஸ். குஜராத்தின் பெரும்பான்மையான விழாக்கள் குறிப்பாக நவராத்திரி, ஹோலி, தசரா பண்டிகைகளின்போது இந்த நடனத்தை ஆடி மக்கள் ஆடிக் கொண்டாடுகின்றனர்.
தாண்டியா ஆடுகையில் மாரடைப்பு
இந்நிலையில் முன்னதாக தாண்டியா ராஸ் நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போதே நபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தின் தாஹோட் மாவட்டம், தேவ்காத் பரியா பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட இந்நபர் விழாவில் தன் உறவினர்களுடன் சேர்ந்து தாண்டியா நடனம் ஆடத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் தாண்டியா ஆடிக்கொண்டிருக்கும்போதே திடீரென உடல் தளர்ந்து மயங்கி சுருண்டு விழுந்த அந்நபர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் அந்நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக முன்னதாக வெளியான மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாண்டியா ஆடிக் கொண்டே பறிபோன உயிர்...🥲 pic.twitter.com/13ZGWhuzey
— Srilibiriya Kalidass (@srilibi) October 18, 2022
இச்சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முந்தைய சம்பவம்
இதேபோல் முன்னதாக இந்தி காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா உடற்பயிற்சி செய்யும்போது சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி மாரடைப்பால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவனையில் ராஜூ ஸ்ரீவஸ்தவா அனுமதிக்கப்பட்டார்.
உடற்பயிற்சியின்போது காமெடி நடிகருக்கு மாரடைப்பு
ஆக்ஸ்ட் 10 ஆம் தேதி பிரபல ஜிம் ஒன்றில் , ட்ரெட்மில்லில் ஓடியவாரு உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராஜூ ஸ்ரீவஸ்தவா திடீரென நெஞ்சுவலியால் கீழே விழுந்திருக்கிறார். இதனையடுத்து ஜிம்மின் மேலாளர் அவரை அருகில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்.
அதே நாளில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. ஆனால் சுயநினைவின்றி வெண்டிலேட்டர் உதவியுடன் இருந்து வந்த ராஜூ ஸ்ரீவஸ்தவா இயல்பு நிலைக்கு திரும்பாமல் சிகிச்சையில் இருந்து வந்தார்.
அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது . ஆனாலும் ராஜூவின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். இந்த நிலையில் 35 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மூளைச்சாவு அடைந்ததாக செய்திகள் வெளியானது. தொடர்ந்து செப்டெம்பர் 21ஆம் தேதி ராஜூ ஸ்ரீவஸ்தவா உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது.
முகம் முழுக்க சிரிப்புடன் , ரசிகர்களை சிரிக்க வைத்து விடைப்பெற்ற ராஜூ ஸ்ரீவஸ்தாவிற்கு வயது 50. இந்தியில் 1988ஆம் ஆண்டு வெளியான ’தேசாப்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா.
2005ஆம் ஆண்டு ஒளிபரப்பான ரியாலிட்டி ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்சின் முதல் சீசனில் பங்கேற்ற பின் பிரபலமானார். உத்தரப் பிரதேச திரைப்பட மேம்பாட்டுக் கவுன்சிலின் தலைவராக இருந்த அவர், மெய்னே பியார் கியா, பாசிகர், பாம்பே டு கோவாவின் ரீமேக் மற்றும் ஆம்தானி அத்தானி கர்ச்சா ரூபாய்யா போன்ற பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.