Maharashtra : பண்ணாத ஆர்டருக்கு வீட்டு வாசலில் டெலிவரிபாய்! பெட்டிக்குள் கத்தி! திட்டம்போட்டு நகை திருட்டு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் டெலிவரி பாய் போல் நடித்து 10.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே அடுத்த பஞ்ச்பகடியில் பகுதியில் வசித்து வரும் 39 வயது பெண், தனது 15 வயது மகன் மற்றும் கணவருடன் வாழ்ந்து வருகிறார். அப்பெண்ணின் கணவர் கட்டுமான ஒப்பந்ததாரராக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 9 ம் தேதி தனது மகனுடன்தாய் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்பொழுது, 20 வயதிற்குட்பட்ட ஒரு நபர் ஸ்விக்கி உடையணிந்து டெலிவரிக்கு வந்துள்ளார். அப்பொழுது, அந்த பெண் தாங்கள் அவர்கள் உணவு எதையும் ஆர்டர் செய்யவில்லை என்று தெரிவிக்கவே, தனக்கு தாகம் எடுப்பதாகவும் ஒரு கிளாஸ் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்தப் பெண் தண்ணீர் எடுக்க உள்ளே சென்றபோது, அந்த நபர், திடீரென வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து, வீட்டு அலமாரியில் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை எடுக்குமாறு அந்த பெண் மற்றும் சிறுவனை மிரட்டியுள்ளார். தன் மகன் மற்றும் தனது உயிர்க்கு ஆபத்து வந்திடுமோ என்று பயந்த அந்த பெண் நகைகளை எடுத்து மர்ம நபரிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, அந்த நபர் 10.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள், பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.
திருடி செல்லப்பட்ட நகை குறித்து அந்த பெண் நௌபாடா காவல் நிலையத்தில் பபுகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 452, 392 மற்றும் 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் நௌபாடா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Chennai: பீச்சா? பெட் ரூமா? எல்லைமீறிய காதல் ஜோடி! தட்டிக்கேட்ட வக்கீலுக்கு பீர் பாட்டில் தாக்குதல்!
இது குறித்து நௌபாடா போலீசார் மற்றும் தானே குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். "குற்றம் சாட்டப்பட்டவர் முகமூடி மற்றும் தொப்பி அணிந்திருந்ததைக் கண்டறிய நாங்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளோம். அவர் ஒளிந்து கொள்ள முயன்றார் மற்றும் காட்சிகளில் பிடிபட்டார். குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடிக்கும் தேடல் நடந்து வருகிறது," என்று பெயர் தெரியாத நிலையில் ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்