நீண்ட மீசை வைத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள்.... சொல்லியும் கேட்காததால் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்த அதிகாரி..!
இது தனக்கு சுயமரியாதை விவகாரம் என்பதால், மீசையை தொடர்ந்து வைத்திருப்பேன் என்று போலீஸ் கான்ஸ்டபின் கூறினார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் தனது தலைமுடியை வெட்ட மறுத்ததாகவும் அசிங்கமான மீசையை குறைக்க மறுத்ததாகவும் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கான்ஸ்டபிள் மத்தியப் பிரதேச காவல்துறையின் கூட்டுறவு மோசடி மற்றும் பொது சேவை உத்தரவாதப் பிரிவின் சிறப்பு இயக்குநர் ஜெனரல் டிரைவராக நியமிக்கப்பட்டார்.
காவல்துறையின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவில் ஓட்டுநராகப் பணிபுரியும் ராகேஷ் ராணாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு, இன்று பல்வேறு சமூக வலைதளங்களில் வெளிவந்தது. இந்த உத்தரவை பிறப்பித்த காவல் அதிகாரி பிரசாந்த் சர்மா, ராணா தனது தோற்றத்தை சரிசெய்வது குறித்து அதிகாரியின் உத்தரவை பின்பற்றாததால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.அவரது தோற்றத்தை பார்த்தபோது, முடி வளர்த்து, கழுத்து வரை மீசையுடன் காணப்பட்டார். அவரது முடி அமைப்பு மோசமாக இருந்ததால், முடியை ஒழுங்கமைக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை” என்றார். Anand Mahindra: ட்விட்டரில் வந்த கேள்வி.. சக்தே இந்தியா ஸ்டைலில் பதிலடி கொடுத்த மஹிந்திரா நிறுவனர்..
மேலும் அந்த அதிகாரி கூறுகையில், கான்ஸ்டபிள் நீண்ட முடி மற்றும் மீசையை வைத்திருப்பதில் பிடிவாதமாக இருப்பதாகவும், இது சீருடை அணிந்த பணியாளர்களுக்கான விதிமுறைகளின்படி இல்லை. எனவே, ஒழுங்கு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று கூறினார்.
Madhya Pradesh Police suspend Constable Driver Rakesh Rana for keeping a long moustache
— ANI (@ANI) January 9, 2022
"I was asked to cut my moustache to a proper size but I refused. Never before in my service, I was asked to do so," says Rakesh Rana pic.twitter.com/vONDF6JmOa
இதுகுறித்து ராகேஷ் ராணா தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், இது தனக்கு சுயமரியாதை விவகாரம் என்பதால், மீசையை தொடர்ந்து வைத்திருப்பேன் என்று கூறினார். மேலும், தான் எப்போதும் சரியான சீருடை அணிந்திருப்பேன் என்று கூறிய ராணா, நீண்ட நாட்களாக மீசை வைத்திருப்பதால் இடைநீக்கம் செய்யப்பட்டாலும் இந்த விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதத்துடன் கூறினார். Fatima Sheikh 191 | முதல் இஸ்லாமிய பெண் ஆசிரியை.. கல்விப் போராளி பாத்திமா ஷேக்கின் பிறந்தநாள்.. கொண்டாடிய Google..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்