3 மணி நிலவரம்.. வாக்குப்பதிவில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திரிபுரா.. பீகாரில் படுமோசம்!
தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரிபுராவில் அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மணி நிலவரப்படி, இந்தியாவிலேயே அதிகபட்சமாக திரிபுராவில் அதிகப்பட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது. அங்கு, 68.35 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா:
குறைந்தபட்சமாக பீகாரில் 39.73 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 45.48 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் 55.48 சதவிகித வாக்குகளும் அஸ்ஸாம் மாநிலத்தில் 60.40 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
லட்சத்தீவில் 43.98 சதவிகித வாக்குகளும் சத்தீஸ்கரில் 58.14 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் 57.09 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் 53.40 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மகாராஷ்டிராவில் 44.12 சதவிகித வாக்குகளும் மணிப்பூரில் 63.03 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. மேகாலயாவில் 61.95 சதவிகித வாக்குகளும் மிசோரத்தில் 49.97 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. நாகாலாந்தில் 52.60 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
புதுச்சேரியில் 58.86 சதவிகித வாக்குகளும் ராஜஸ்தானில் 41.51 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. சிக்கிமில் 52.72 சதவிகித வாக்குகளும் தமிழ்நாட்டில் 51.18 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:
உத்தர பிரதேசத்தில் 47.44 சதவிகித வாக்குகளும் உத்தரகாண்டில் 45.62 சதவிகித வாக்குகளும் மேற்குவங்கத்தில் 66.34 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. அருணாச்சல பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கும் அஸ்ஸாம் மாநிலத்தில் 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து வருகிறது.
பீகாரில் 4 தொகுதிகளுக்கும் சத்தீஸ்கரில் ஒரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மணிப்பூர், மேகாலயாவில் தலா 2 தொகுதிகளுக்கும் மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு, புதுச்சேரியில் தலா 1 தொகுதிக்கும் தேர்தல் நடந்து வருகிறது. ராஜஸ்தானில் 12 தொகுதிகளுக்கும் உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து வருகிறது. உத்தரகாண்டில் 5 தொகுதிகளுக்கும் மேற்குவங்கத்தில் 3 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
முதற்கட்ட தேர்தலில் 2 முன்னாள் முதலமைச்சர்கள், 8 மத்திய அமைச்சர்கள், முன்னாள் ஆளுநர் என பல நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.