(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video : குட்டி கிச்சனில் தர்பூசணியை வெட்டும் குட்டி க்யூட் குழந்தை.. வைரல் வீடியோ
இன்ஸ்டகிராமில் வீடியோ பதிவேற்றப்பட்டது முதல், 72.1 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளதோடு, 3.5 மில்லியன் விருப்பங்கள் மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கருத்துக்களையும் பகிர்ந்துவருகின்றனர்.
க்யூட்டாக தர்பூசணியை வெட்டி சாப்பிடும் குட்டி குழந்தையின் வீடியோ தான் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
சிரித்தாலும், அழுதாலும்,கோபம் கொண்டாலும், அடித்தாலும், அடம்பிடித்தாலும், கொஞ்சினாலும், மழலை மொழியில் பேசினாலும்….இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி நம்முடைய குழந்தைகள் என்ன செய்தாலும் ரசிக்கும்படியாக தான் இருக்கும். குறிப்பாக இன்றைக்கு குழந்தைகள் செய்யும் அத்தனையும் மிகவும் ரசிக்கும் படியாகவும், பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் தான் அமைகிறது. அதற்கேற்றால் போல் தான் தற்போது சோசியல் மீடியாக்களின் ஆதிக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், ஒவ்வொரு பெற்றோர்களும் ஏதாவது சிறிய கிளிப் வீடியோ ஒன்றை எடுத்து அதனை சோசியல் மீடியாவில் அப்லோடு செய்து விடுகின்றனர்.
அதுவும் க்யூட்டாக மட்டுமில்லாமல் மழலை மொழியில் என்ன செய்தாலும் அது டிரெண்டிங் தான் ஆகும். குறிப்பாக சோறு முக்கியமாக சங்கம் முக்கியமான ஒருவர் கேட்க சோறு தான் முக்கியம் என அழுதுக்கொண்டே குழந்தைப் பேசியது, கோவை ரித்விக், என சோசியல் மீடியாவில் டிரெண்டா குழந்தைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இதோடு மட்டுமின்றி பெயர் தெரியாத சில குழந்தைகளின் வீடியோக்களை ரசிப்பதற்கும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அது தான் இப்போது இணையத்தை கலக்கிக்கொண்டும் உள்ளது.
அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் இன்ஸ்டாவில் தற்போது வைரலாகிவருகிறது. அது க்யூட்டான ஒரு குட்டி பேபி. தன்னுடைய மினி கிச்சனில் தர்பூசணியை வெட்டி சாப்பிடும் வீடியோ தான். அந்த வீடியோவில், “குடுகுடுவென நடந்து வரும் குழந்தை தன்னுடைய மினி கிச்சன் கபோர்டில் உள்ள தர்பூசணியை எடுத்து வாஸ்பேஷனில் கழுவுகிறது.பின்னர் சிறிய கத்தி ஒன்றை எடுத்து அழகாக அதனை கட் செய்து ப்ளேட்டில் போட்டு சாப்பிடுகிறது“. இறுதியில் எதார்த்தமாக சிரிக்கும் குழந்தையின் வீடியோ தான் தற்போது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
View this post on Instagram
மேலும் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டது முதல், 72.1 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளதோடு, 3.5 மில்லியன் விருப்பங்கள் மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கருத்துக்களையும் பகிர்ந்துவருகின்றனர். குறிப்பாக இந்த வீடியோவைப்பார்த்த பலர், இக்குழந்தையைப்பார்க்கும் போது எங்கள் வீட்டில் உள்ள குட்டிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள். நாங்களும் எங்கள் குழந்தையை இதுப்போன்று சின்ன சின்ன வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.