மேலும் அறிய

Congress : யாரெல்லாம் போட்டி? காங்கிரஸ் தலைவர் போட்டிக்கான தேர்தலில் ட்விஸ்ட்டுக்கு மேல ட்விஸ்ட்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட், திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் ஆகியோர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கான அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடைபெறும் என்றும், அக்டோபர் 17 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது. 

ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மீண்டும் எழ தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட், திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் ஆகியோர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இதையடுத்து, இந்த போட்டியில், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல் நாத் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவரின் பெயர் பரிசீலனையில் இருப்பதாகவும் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

20 ஆண்டுகளுக்கும் பிறகு நடைபெற உள்ள முதல் தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. இச்சூழலில், பல காங்கிரஸ் தலைவர்கள், தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மணீஷ் திவாரி, பிருத்விராஜ் சவான், முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் அடங்குவர்.

ஆனால், போட்டியிடுவதற்கான திட்டம் எதுவும் இல்லை என சவான் மற்றும் வாஸ்னிக் மறுப்பு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஜி - 23 குழுவை சேர்ந்த தலைவர்கள் போட்டியிட அதிக ஆர்வம் காட்டி வருவது தெளிவாகிறது.

தொடர் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியில், அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளக் கோரியும் முடிவுகளை ஒருங்கிணைந்து எடுக்க வலியுறுத்தியும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.

அதில், முக்கிய தலைவர்களான கபில் சிபல், குலாந் நபி ஆசாத் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டனர். இதற்கு மத்தியில், அக்குழுவின் மற்றொரு முக்கிய தலைவர் சசி தரூர், தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில் அக்குழுவில் உள்ள தலைவர்களின் மத்தியில் ஒரு மித்த கருத்து நிலவவில்லை எனக் கூறப்படுகிறது.

தலைவர் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தை தரூர் சோனியாவிடம் தெரிவித்துவிட்டார். இதையடுத்து, நேற்று, திக்விஜய சிங், என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், தான் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என தெரிவித்தார்.

போட்டியில் அசோக் கெலாட்டை விரும்புவீர்களா அல்லது சசி தரூரை விரும்புவீர்களா என்று தொகுப்பாளர் கேட்டபோது, "பார்ப்போம். போட்டியில் இருந்து நான் என்னை விலக்கவில்லை. என்னை ஏன் ஒதுக்கி வைக்க விரும்புகிறீர்கள்? போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு. அதற்கான பதில் வரும் 30ஆம் தேதி மாலை தெரிந்துவிடும்” என்ற அவர் பதில் அளித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget