Leaders Wishing ABPNadu: 3 ஆம் ஆண்டில் நடைபோடும் ABP நாடு.. குவிந்த அன்பான வாழ்த்துகள்.. பாராட்டுகளை பொழிந்த தலைவர்கள்!
இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான ஏபிபி நெட்வொர்க்கின் தமிழ் செய்தி தளமான ஏபிபி நாடு இன்று தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தநிலையில், தலைவர்கள் தெரிவித்த வாழ்த்துகளை கீழே பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான ஏபிபி நெட்வொர்க்கின் தமிழ் செய்தி தளமான ஏபிபி நாடு இன்று தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு பல்வேறு தலைவர்கள், தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்தநிலையில், தலைவர்கள் தெரிவித்த வாழ்த்துகளை கீழே பார்க்கலாம்.
முதலமைச்சர் முக ஸ்டாலின்:
வணக்கம்..! 100 ஆண்டுகளுக்கு முன்பு வங்கத்தில் அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சிவப்பு மையை கொண்டு தொடங்கப்பட்டது தான் ஏபிபி நாளேடு. காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு செய்திதாள், செய்திதொலைக்காட்சி, டிஜிட்டல் செய்திதளம் என்று தற்போது இந்திய அளவில் முதன்மை ஊடகங்களில் ஒன்றாக திகழ்கிறது ஏபிபி செய்தி நிறுவனம்.
அதன் ஒரு அங்கமான ஏபிபி நாடு தமிழ் டிஜிட்டல் ஊடகம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாமாண்டில் அடியெடுத்து வைப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். லேட்டஸ்ட் நியூஸ், லேட்டஸ்ட் தமிழர்களுக்காக என்ற நோக்கத்துடன் மூன்றாமாண்டு பிறந்தநாளை கொண்டாடும் ஏபிபி நாடு மென்மேலும் வளர்ந்து அறம் பிறழாமல் தமிழர்களின் நலம் சார்ந்து செய்திப் பணியாற்றிட வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.
ஆளுநர் ஆர்.என்.ரவி:
ஏபிபி நாடு, மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி.இந்த தருணத்தில், ஏபிபி குழுமத்திற்கும் குறிப்பாக ஏபிபி நாடு குடும்பத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். எதிர்காலத்தை நோக்கிய அவர்களின் நீண்ட போற்றத்தக்க பயணத்திற்காகவும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
எதிர்காலத்தை நோக்கிய நீண்ட பயணத்தில் தமிழ் கலாசாரம், ஆன்மீகம், இலக்கிய வளத்தை பறைசாற்றுவது மட்டும் இன்றி நெறி சார்ந்த இதழியிலில் ஏபிபி நாடு நிலையான உறுதியை பூண்டு இருக்கும் என நம்பிக்கை உள்ளது.
ஏபிபி நாடுவுக்கும் அதன் ஒட்டுமொத்த குழுவிற்கும் நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நன்றி. வாழ்க தமிழ். ஜெய்ஹிந்த்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்:
ஏபிபி நாடு ஊடகம், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த தருணத்தில் ஏபிபி நாடு ஊடகத்தை நான் மனமாற வாழ்த்துகிறேன்.
அதுமட்டுமல்ல, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டு காலம் பல்வேறு வகைகளில் மக்கள் பிரச்னைகளை சமூக ஊடகம் மூலம் அதேபோன்று பல்வேறு வகைகளில் அதை எடுத்து சென்று ஏபிபி நாடு திறம்பட கையாண்டு இருக்கிறது.
இதை நல்ல விஷயமாக கருதுகிறேன். ஏபிபி நாடை பொறுத்தவரையில் இரண்டாம் ஆண்டில் இருந்து மூன்றாம் ஆண்டு அடியெத்து வைக்கும் சமயத்தில் மேலும் வெள்ளிவிழா பவள விழாவும் காண்பதற்கு நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
ஊடகம் என்றால் ஒரு தராசு போல நியாயம், அந்நியாயம் என இரண்டையும் சீர் தூக்கி பார்த்து மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுதான் ஊடகத்துடைய நற்பண்புகளாக இருக்கும். அந்த வகையில், ஏபிபி நாடு தங்களுடைய கடமையை சிறப்பாக திறம்பட செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை:
தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கக்கூடிய ஏபிபி நாடு இந்திய அளவில் மிக பெரிய தொலைக்காட்சி நிறுவனமாக உள்ளது. தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. கடுமையாக வேலை செய்யக்கூடிய பணி செய்யக்கூடிய பத்திரிகை சகோதரர்கள் இதில் இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில், உங்களுக்கு இன்னும் தெம்பாக வலிமையாக அடுத்த கட்ட பயணத்திற்கு நீங்கள் செல்வதற்கு இறை அருள் உங்களுக்கு இருக்கட்டும் என பாஜக சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழிசை சவுந்தரராஜன்:
ஏபிபி நாடு தொலைக்காட்சி இரண்டாவது ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள். மிக பிரம்மாண்டமாக அவர்கள் வர வேண்டும். இன்னும், அதிகமாக ஊடக சேவை செய்ய வேண்டும். எல்லோர்க்கும் நல்ல செய்திகளை நடுநிலையுடன் மகிழ்ச்சியாக கொடுக்க வேண்டும்.
இன்னும் அதிக மக்கள் பார்த்து பயன் அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன். மறுபடியும் அவர்கள் மூன்றாம் ஆண்டு மட்டும் இன்றி இன்னும் பல ஆண்டுகள் ஊடக சேவை செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா:
ஏபிபி நாடு சேனல் இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கிய 2 ஆண்டுகளில் பல்வேறு நன்மதிப்புகளைப் பெற்று, மக்கள் மத்தியில் நல்ல பதிவுகளை செய்துக் கொண்டிருக்கிறது. இந்த சேனல் தொடர்ந்து நற்பணிகளை செய்து மக்களுக்கு தொண்டாற்றவும், அவர்களின் குறைகளை அரசுக்கு வெளிப்படுத்தக்கூடிய சேனலாக தொடர்ந்து செயல்பட வேண்டும். ஈரோட்டில் நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் 40வது வணிகர் தின சங்க மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்கிறார்கள்.
கவிஞர் வைரமுத்து:
ஏபிபி நாடு .. வெற்றிகரமாக 2 ஆண்டுகளை கடந்து 3 ஆம் ஆண்டில் எட்டு வைப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். 2 ஆண்டுகளில் 10 ஆண்டுகளை கடந்து செய்த சாதனைகளை ஏபிபி நாடு செய்திருக்கிறது என்பது பரவலாக பேசப்படுகிறது. நண்பர்கள் இதுகுறித்து உரையாடும் போது ஏபிபி நாடு பற்றி நல்ல செய்திகளையே எனக்கு தருகிறார்கள். இது யூட்யூப்பில் மட்டும் 2.5 கோடி வாசகர்களையும், பேஸ்புக்கில் 3 கோடி வாசகர்களையும், இணையத்தில் ஒரு கோடி நேயர்களையும் கொண்டிருப்பது செய்திகளின் நம்பகத்தன்மையை காட்டுகிறது.
தருமபுரம் ஆதீனம்:
ஏபிபி நாடு இன்றைய மக்கள் மனதின் தேவையை பூர்த்திச் செய்ய பல செய்தி பிரிவுகள், ஊடகங்கள் வளர்ந்திருக்கின்றன. அந்த வகையில் நூறாண்டு காலம் தொட்ட ஏபிபி நாடு சேனல் தமிழகத்தில் காலூன்றி 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது பல துறைகளில் மக்களை கவர்ந்து இருக்கிறது. அரசியல், ஆன்மீகம், கல்வி போன்ற துறைகளில் மக்களுக்கு நல்ல பணிகளை செய்கிறது.
ஊடகம் என்பது ஒருதலைப் பட்சமாக இல்லாமல் பொதுவாக நின்று எல்லோருக்கும் நல்லது செய்யும் விதமாக அமைய வேண்டும். அதனை ஏபிபி நாடு நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் நூற்றாண்டுகள் இருந்து மக்களின் பணிகளை செவ்வென செய்து மக்கள் மனதில் பதிவு செய்ய வேண்டும் என வேண்டி ஆசீர்வதித்துக் கொள்கிறேன்.
சு.வெங்கடேசன் மதுரை எம்.பி:
இந்திய அளவில் சிறந்து விளங்கும் ABP செய்தி நிறுவனத்தின் டிஜிட்டல் தமிழ் செய்தித் தளமான ABP நாடு மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ்நாட்டு ஊடக வெளியில் ஜனநாயகத்தின் குரலுக்கு வலிமை சேர்க்கும் abpnadu செய்திப் பயணம் சிறப்புற வாழ்த்துகள்.