மேலும் அறிய

பிரதமர் மோடி அமைச்சரவை 2.0: புதிதாக இணைந்துள்ள 7 பெண் அமைச்சர்கள் யார், யார்?

புதிதாக 7 பெண்கள் அமைச்சரவையில் இன்று இணைந்துள்ளனர்.

மத்திய பாரதிய ஜனதா அரசின் புதிய அமைச்சரவை விரிவாக்கப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 43 பெயர்கள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் 7 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். மீடியா அறிந்த முகங்களான ஜோதிராதித்ய சிந்தியா, மீனாட்சி லேகி உள்ளிட்ட பெயர்கள் பட்டியலில் உள்ளன. இது தவிர பட்டியலில் உள்ளவர்களில் 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் உள்ளனர்.

ஏற்கனவே, மத்திய அரசின் அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இராணி, ரேணுகா சிங், சத்வி நிரஞ்சன் ஜோதி போன்ற பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ள நிலையில்,  மேலும் புதிதாக 7 பெண்கள் அமைச்சரவையில் இன்று இணைந்துள்ளனர்.

1. அனுப்பிரியா சிங் படேல்

பிரதமர் மோடி அமைச்சரவை 2.0: புதிதாக இணைந்துள்ள 7 பெண் அமைச்சர்கள் யார், யார்?

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரைச் சேர்ந்த அனுப்பிரியா சிங் படேல், எம்.பி.ஏ பட்டப்படிப்பு படித்தவர். எம்.எல்.ஏவாக பதவி வகித்து, பின் மிர்சாபூரில் இருந்து இரண்டாவது முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர். மாநில சுகாதார துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.

2. சுஸ்ரீ ஷோபா கரந்லஜே

பிரதமர் மோடி அமைச்சரவை 2.0: புதிதாக இணைந்துள்ள 7 பெண் அமைச்சர்கள் யார், யார்?

கர்நாடக மாநிலம், தக்‌ஷின கன்னடா பகுதியைச் சேர்ந்தவர் சுஸ்ரீ ஷோபா கரந்லஜே.  30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வருபவர். உடுப்பி சிக்மகளூர் தொகுதியில் இருந்து இரண்டாவது முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர். 

3. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்

பிரதமர் மோடி அமைச்சரவை 2.0: புதிதாக இணைந்துள்ள 7 பெண் அமைச்சர்கள் யார், யார்?

குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த 60 வயதான தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், பி.காம் பட்டப்படிப்பு படித்தவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது பணியில் ஈடுபட்டு வருபவர், சூரத் தொகுதியில் இருந்து மூன்றாவது முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

4. மீனாக்‌ஷி லேகி

பிரதமர் மோடி அமைச்சரவை 2.0: புதிதாக இணைந்துள்ள 7 பெண் அமைச்சர்கள் யார், யார்?

டெல்லியைச் சேர்ந்த 54 வயதேயான மீனாக்‌ஷி லேகி, டெல்லி பல்கலையில் எல்.எல்.பி பட்டம் படித்தவர். உச்சநீதி மன்ற வழக்கறிஞராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் பணியாற்றி வருபவர். புது டெல்லியில் இருந்து எம்.பியாகதேர்ந்தெடுக்கப்பட்டவர். தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்பவர்.

5. அனுப்புரானா தேவி

பிரதமர் மோடி அமைச்சரவை 2.0: புதிதாக இணைந்துள்ள 7 பெண் அமைச்சர்கள் யார், யார்?

ஜார்க்கண்ட மாநிலம், வடக்கு சோட்டாநாக்பூர் பகுதியைச் சேர்ந்த 51 வயதான அனுப்புரானா தேவி, கொடர்மா தொகுதியில்  இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். ஜார்க்கண்ட மற்றும் பீகார் மாநிலத்தில் இருந்து 4 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். அரசியல் பயணத்தை தொடங்கி, தனது 30 வயதில் பீகார் அரசின் அமைச்சரவையில் பதவி வகித்தவர்.

6. பிரதிமா பெளமிக்

பிரதமர் மோடி அமைச்சரவை 2.0: புதிதாக இணைந்துள்ள 7 பெண் அமைச்சர்கள் யார், யார்?

திரிப்புரா மாநிலம் அகர்டலாவைச் சேர்ந்த 52 வயதான பிரதிமா பெளமிக், எளிமையான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். திரிபுரா மேற்கு தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

7. பாரதி பிரவின் பவர்

பிரதமர் மோடி அமைச்சரவை 2.0: புதிதாக இணைந்துள்ள 7 பெண் அமைச்சர்கள் யார், யார்?

மகாராஷ்டிரா மாநிலம் கந்தேஷ் நகரைச் சேர்ந்த 42 வயதான பாரதி பிரவீன் பவர், அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு மருத்துவராக பணியாற்றியவர். மகாராஷ்டிரா திந்தோரி தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு

Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகல
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!

80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!

DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு

Embed widget