(Source: ECI/ABP News/ABP Majha)
Siddharth Tweet | சாய்னா நேவாலை குறித்து சித்தார்த் பதிந்த மோசமான ட்வீட்.. வலுக்கும் கண்டனங்கள்..
நடிகர் சித்தார்த்தின் சர்ச்சைக்குரிய ட்வீட்டுக்கு குஷ்பு, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்
சாய்னா நேவாலின் ட்வீட்டை பகிர்ந்து சித்தார்த் பதிவு செய்திருக்கும் பாலியல் ரீதியான மோசமான ட்வீட்டுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி சில நாள்களுக்கு முன்பு பஞ்சாப் சென்றார். காரில் அவர் சென்ற வழியில் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. இதனையடுத்து பிரதமரின் வாகனம் அடுத்து எங்கும் நகர முடியாமல் அங்கேயே 15-லிருந்து 20 நிமிடங்கள்வரை காத்திருந்தது. பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி தனது அதிருப்தியை தெரிவித்த பிரதமர், பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு திரும்பிவிட்டார். விமான நிலையம் வந்த அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், தான் உயிரோடு விமானநிலையம் வந்திருப்பதற்கு உங்கள் முதலமைச்சருக்கு நன்றி கூறுங்கள் என சொல்லியதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி நடந்ததாக பாஜகவினர் குற்றஞ்சாட்டினர். ஆனால் அவைகளை பஞ்சாப் முதலமைச்சர் தீவிரமாக மறுத்தார்.
No nation can claim itself to be safe if the security of its own PM gets compromised. I condemn, in the strongest words possible, the cowardly attack on PM Modi by anarchists.#BharatStandsWithModi #PMModi
— Saina Nehwal (@NSaina) January 5, 2022
இந்நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து, “ தனது சொந்த பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டால், தன்னை பாதுகாப்பாக இருப்பதாக எந்த நாடும் கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் கண்டிக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
Subtle cock champion of the world... Thank God we have protectors of India. 🙏🏽
— Siddharth (@Actor_Siddharth) January 6, 2022
Shame on you #Rihanna https://t.co/FpIJjl1Gxz
இதற்கு நடிகர் சித்தார்த் பாலியல் ரீதியாக சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அவரது ட்வீட்டுக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “சித் நீங்கள் ஒரு நண்பர் ஆனால் கண்டிப்பாக உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் மோசமானது.
Sid you are a friend but definitely wasn't expecting this from you. It's very crass. I am sure Uncle n Aunty wouldn't be proud of you. Don't get carried with your hatred towards an individual. https://t.co/0NjR4NWMuZ
— KhushbuSundar (@khushsundar) January 10, 2022
உங்கள் தாயும், தந்தையும் உங்களைப் பற்றி பெருமைப்படமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு தனி நபர் மீது உங்கள் வெறுப்பை கொண்டு செல்லாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது போன்ற கேவலமான ட்வீட்கள் குறிப்பாக ஒரு நடிகரிடமிருந்து வருவதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது.
இது போன்ற கேவலமான ட்வீட்கள் குறிப்பாக ஒரு நடிகரிடமிருந்து வருவதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. அவரது வரவிருக்கும் திரைப்பட விளம்பரத்திற்காக வெறும் 5 நிமிட புகழ்காக. பிரதமரின் பாதுகாப்பு, தேசிய ஜாம்பவான்களை கேலி செய்யும் பிரபல நடிகர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று வெட்கப்படுகிறேன். pic.twitter.com/HNitSICC1d
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) January 10, 2022
எதிர் வரவிருக்கும் திரைப்பட விளம்பரத்திற்காக வெறும் 5 நிமிட புகழுக்காக. பிரதமரின் பாதுகாப்பு, தேசிய ஜாம்பவான்களை கேலி செய்யும் பிரபல நடிகர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று வெட்கப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
Ive seen enough 'Dharmic, Hindu' (men/women) handles abuse with "You deserved to be molested" to woke men being abusive with a tinge of lacquer. As far as I am concerned - across all 'wings', most are very much the same when it comes to debate. They WILL stoop to sexist abuse.
— Chinmayi Sripaada (@Chinmayi) January 10, 2022
அதேபோல் சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் துன்புறுத்தப்படுவதற்கு தகுதியானவர் என்று துஷ்பிரயோகம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் விவாதம் என்று வரும்போது அவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு தள்ளப்படுவார்கள்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்