ஹமாஸ் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த பெண் காயம்; உறவினர்களுக்கு தூதரக அதிகாரிகள் ஆறுதல்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் ஏவுகணைகள் உள்ளிட்ட பலம் வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் கேரளாவைச் சேர்ந்த ஷீஜா ஆனந்த் என்ற பெண் காயம் அடைந்துள்ளார். இருப்பினும் ஷீஜா ஆனந்துக்கு ஏற்பட்ட காயம் குறித்து உறவினர்கள் கவலைப் படவேண்டாம் என தூதரக அதிகாரிகள் ஆறுதல் தெரிவித்துள்ளனர். ஷீஜா ஆனந்த் இஸ்ரேலில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால், இஸ்ரோல் தரப்பில் இருந்தும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இதுவரை இருதரப்பிலும் சேர்த்து குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் ஆயிரத்து நூறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் உலகம் முழுவதும் இதற்கான எதிர்ப்பும் கண்டனங்களும் போரினை நிறுத்த வேண்டி கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இஸ்ரேலிய தாக்குதலில் நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் ஒரு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஒருவரு கொல்லப்பட்டதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நேற்று அதாவது செப்டம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இரண்டு உக்ரைனியர்களும் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமையை காரணம் காட்டி ஆசியாவில் உள்ள பல விமான நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான தங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளன.
வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் காசாவில் சுமார் 123,538 பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.