Accident: 50 அடி பள்ளத்திற்குள் கவிழ்ந்த அரசு பேருந்து... ஒருவர் உயிரிழப்பு.. 20 பேர் காயம்..
பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் ஒருவர் பலி.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவின் மூணாறிலிருந்து எர்ணாக்குளத்திற்கு பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் நெறியமங்கலம் பகுதியில் வளைவு ஒன்று இருந்துள்ளது. அந்த வளைவில் திரும்ப முற்பட்ட போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அத்துடன் பேருந்து அருகே இருந்த 50 அடி பள்ளத்திற்குள் விழுந்துள்ளது.
A passenger died while several others were injured when a #Kerala State Road Transport Corporation (KSRTC) bus fell into a ditch in Kerala's Idukki district on Monday.@TheKeralaPolice pic.twitter.com/6T8VsiL0l8
— IANS (@ians_india) September 12, 2022
இந்த விபத்தில் பேருந்தில் 55 பேர் பயணம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடைய உடலை மீட்டு காவல்துறையினர் அடையாளம் கண்டறிந்தனர். அதன்படி அந்த நபர் அடிமள்ளியை சேர்ந்த சஜீவ்(52) என்பவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்ட காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் சாலை வளைவில் பேருந்து சென்று கொண்டிருந்த போது டையர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கரில் பேருந்து-லாரி விபத்து:
சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ளது கோர்பா மாவட்டம். இங்குள்ள பாங்கோ காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மடாய்கட் பகுதி. இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை தனியார் சொகுசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, இந்த பேருந்தின் எதிரே கார் ஒன்று வந்துள்ளது. இதனால், காரின் மீது மோதக்கூடாது என்பதற்காக பேருந்து ஓட்டுனர் பேருந்தை பக்கவாட்டில் திருப்பியுள்ளார். ஆனால், பேருந்தின் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது பேருந்து மோதியது.
Seven people were dead and three injured in a road accident in @KorbaDist of #Chhattisgarh around 4 am today. A passenger bus rammed into a parked truck in attempt to prevent hitting a car. @SantoshSinghIPS @PoliceKorba #Accident pic.twitter.com/L8RZy2KkNe
— RASHMI DROLIA (@rashmidTOI) September 12, 2022
இதில் பேருந்தின் ஒருபுறம் முழுவதும் கடுமையாக சேதமடைந்தது. மேலும், லாரியின் மீது மோதிய வேகத்தில் பேருந்தின் பக்கவாட்டில் தீப்பிடித்தது. இதனால், பேருந்தின் உள்ளே தூங்கிக்கொண்டு பயணம் செய்த பயணிகள் 7 பேர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்தனர். அதிகாலையில் நிகழ்ந்த இந்த கோர விபத்து குறித்த அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.