மேலும் அறிய

Sealed over judgement: மீடியா ஒன் அலைவரிசை அனுமதி ரத்து வழக்கு... என்று தணியும் இந்த 'சீல்டு கவர்' மோகம்?

வழக்கை விசாரித்த  நீதிபதி ஜி.எம் நாகரேஷ் ரிட் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், உள்துறை அமைச்சகத்தால் இந்த அலைவரிசைக்குப் பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது, நியாயமானது என்றும் தெரிவித்தார்.  

இந்திய அரசியலமைப்பின் அடிப்படை லட்சுமண ரேகையை தாண்டி,  பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் அரசின் உத்தரவுகளை நியாயப்படுத்தும் குரலாக நீதிமன்றங்கள் செயல்பட்டு வருவதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கௌதம் பாட்டியா கருத்து தெரிவித்துள்ளார்.       

முன்னதாக, மீடியா ஒன் அலைவரிசையை  செயல்படுத்தி வரும் மத்யமம் ஒலிபரப்பு நிறுவனத்திற்கு  வழங்கப்பட்ட அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் அனுமதியை  ரத்து செய்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 2022 ஜனவரி 31 அன்று உத்தரவு பிறப்பித்தது.  இந்த அலைவரிசையின் பெயரை அனுமதிக்கப்பட்ட அலைவரிசைகளின் பட்டியலிலிருந்தும் இந்த உத்தரவு நீக்கியது. 

Sealed over judgement: மீடியா ஒன் அலைவரிசை அனுமதி ரத்து வழக்கு... என்று தணியும் இந்த 'சீல்டு கவர்' மோகம்?

தகவல் மற்றும் ஒலிபரப்பு  அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து  மனுதாரர் கேரள உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த  நீதிபதி ஜி.எம் நாகரேஷ் ரிட் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், உள்துறை அமைச்சகத்தால் இந்த அலைவரிசைக்குப் பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது, நியாயமானது என்றும் தெரிவித்தார்.  

தனது தீர்ப்பை நியாயப்படுத்தும் விதமாக, மூன்று முக்கிய கருத்துகளையும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். 

1. தேசிய பாதுகாப்பு விஷயங்களில் இயற்கை நீதிக் கோட்பாடுத் தத்துவத்தை பேணிக்காப்பதில் நீதிமன்றங்களின் தலையீடு மிகக் குறைவான பங்கைக் கொண்டுள்ளது.  

2. வேத காலத்தைச் சேர்ந்த "அத்ரிசம்ஹிதா" (Atrisamhita) என்ற நூல், "தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.  

3. சீல் வைக்கப்பட்ட உறையில் உளவுத்துறை அளித்த தகவல்கள் அடிப்படையில், இந்த அலைவரிசைக்குப் பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது, நியாயமானது. 

Sealed over judgement: மீடியா ஒன் அலைவரிசை அனுமதி ரத்து வழக்கு... என்று தணியும் இந்த 'சீல்டு கவர்' மோகம்?

ஆனால், இந்த மூன்று வாதங்களும் பொருந்தாதவையாக உள்ளன என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. உதாரணமாக, தேசிய பாதுகாப்பு விசயங்களில் நீதிமன்றங்களின் தலையீடு குறைவானது என்ற வாதத்தை ஏற்க முடியாது என கௌதம் பாட்டியா தெரிவித்துள்ளார். 1985 ஆம் ஆண்டு இங்கிலாந்து மேலவையில் நடைபெற்ற ஒரு வழக்கில் தேசிய பாதுகாப்பை வரையறுக்கும் பொறுப்பு நீதிமன்றங்களின் வரம்பு வெளியே இருப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த, தீர்ப்பை முன்னுதாரனமாக கொண்டு இந்திய உச்சநீதிமன்றமும், கேரள உயர்நீதிமன்றமும் தீர்ப்புகளை முடிவெடுக்கின்றனர். 

ஆனால், இங்கிலாந்து நாடாளுமன்றம் சர்வவல்லமை கொண்ட ஒரு அரசு அமைப்பாக செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் படி,  நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய 3 அங்கங்களும் அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படுவதை தான்  அரசு என்று கூறுகிறோம். இந்த மூன்று அங்கங்களும், தன்னிச்சையாக செயல்படக்கூடியவை. இருப்பினும்,  நாடாளுமன்றம் மற்றும்  நிர்வாகத்தை கண்காணிப்பும் ஒரு கருவியாக இந்தியாவின் நீதித்துறையை அரசியலமைப்பு வல்லுநர்கள் வடிவமைத்தனர். 

அரசியலமைப்பின் 19வது சரத்தின் படி, குடிமக்கள் அனைவருக்கும் பேச்சு, சிந்தனை வெளிபடுத்துகை ஆகியவற்றிற்கான சுத்தந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த, அடிப்படை உரிமையைக் காக்க வேண்டிய பொறுப்பு நீதித்துறைக்கு உண்டு. அடிப்படை உரிமைகள் மறுக்கும்போது நீதிமன்றத்தை அணுகுவதையும் ஒரு உரிமையாக கூறப்பட்டுள்ளது. 

இரண்டாவதாக, உளவுத்துறை தகவல்கள் சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்பிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், அலைவரிசைக்குப் பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது  நியாயமானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுத் தளத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டத்தால் அது ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுக்கும். பேச்சுச் சுதந்திரம் தொடர்பான வழக்கில் வெளிப்படைத் தன்மையே சிறந்த நியாயத்தை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

Censorship by Sealed Cover: The Kerala High Court’s MediaOne “Judgment” - GAUTAM BHATIA

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget