Kerala Landslides: வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 10,00 நிதியுதவி: ஆனால் கண்டிஷன்..!
Kerala Financial Aid: கேரள நிலச்சரிவில் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அவசரகால உதவி நிதியாக ரூ. 10, 000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது
கேரளம் வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை மற்றும் சூரல்மலா உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்த மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாக கேரள அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. உயிர் பிழைத்தவர்கள் புதிய இடத்திற்கு இடம்பெயர்வதற்கு உதவுவதற்காக வழங்கப்படும் இந்த உதவியானது, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாய், அவசர நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் ரூ. 300:
பேரிடர் காரணமாக வருமானத்திற்கான ஆதாரத்தை இழந்த வாடும் குடும்பங்களில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, அரசு நாள்தோறும் ரூ.300 உதவித் தொகையாக வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளது. இது, ஒரு குடும்பத்திற்கு இரண்டு உறுப்பினர்களுக்கு மட்டுமே இருக்கும், குடும்ப உறுப்பினர் ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டாலோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ தவிர, இந்த நன்மை மூன்று உறுப்பினர்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி அதிகபட்சம் 30 நாட்களுக்கு வழங்கப்படும்.
வீடுகள் ஏற்பாடு:
நிலச்சரிவுகளில் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசாங்கத்திற்குச் சொந்தமான அல்லது பொதுச் சொத்துக்களில் வீட்டு வசதிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்யுமாறும், அறிக்கை வந்தவுடன் அரசு வாடகை நிர்ணயம் செய்து உரிய உதவிகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு - பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 - கேரளா அரசு அறிவிப்புhttps://t.co/wupaoCz9iu | #WayanadLandslide #wayand #Kerala #pinarayivijayan pic.twitter.com/IhaRDWSZZH
— ABP Nadu (@abpnadu) August 9, 2024
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, ஒட்டுமொத்த நாட்டையும் சோக கடலில் மூழ்கடித்துள்ளது. கடந்த ஜூலை 30 அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 400 பேர் இறந்துள்ளனர் என்றும், மேலும் 120 க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. சம்பவம் நடந்து 10 நாட்கள் நிறைவு பெற உள்ள நிலையில், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத துயரங்களை பலர் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் பலர் கேரள மக்களுக்கு பொருள் உதவி மற்றும் நிதியுதவி வழங்கி வருவதை பார்க்க முடிகிறது.
Also Read: Landslides ISRO: கேரளம் நிலச்சரிவுக்கு முன்-பின் எப்படி இருந்தது?: புகைப்படம் வெளியிட்ட இஸ்ரோ..!