Kerala Full Lockdown: கேரளாவில் வரும் 8ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு; முதல்வர் பினராயி அறிவிப்பு
கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வரும் நிலையில், அம்மாநிலத்தில் முழு ஊரடங்கை பிறப்பித்து முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றனது.
மேலும், தொற்று பரலவை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Lockdown to be imposed in the state from 6 am on May 8 to May 16, in wake of the surge in COVID-19 cases in the second wave: Kerala CM Pinarayi Vijayan

(file photo) pic.twitter.com/16N1wY47It
— ANI (@ANI) May 6, 2021

இந்நிலையில், கேரளாவில் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் அதிகரித்து கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இன்று காலை 4 மணி முதல் 20ஆம் தேதி காலை 4 மணி வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.