மேலும் அறிய

"புராணங்கள் உண்மையா? வரலாற்றை மாற்ற பாக்குறாங்க" மோடி அரசை விளாசிய பினராயி விஜயன்!

கேரளா, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்ட அதிகாரத்தை மீறி செயல்பட முனைந்தனர் என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

உலக நாடுகள் புதியவற்றை கண்டுபிடிக்க பணம் செலவிடும் நேரத்தில், புராணங்களை உண்மை எனக் கூறி மத்திய அரசு செலவு செய்து வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார். கல்வி, விவசாயம், மின்துறை உள்பட பல துறைகள் சார்ந்து மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இவை, மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் நோக்கில் உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

"இந்திய வரலாற்றை மாற்றி எழுத முயற்சி"

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வரைவு விதிகளுக்கு எதிராக கல்வியாளர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, தென் மாநிலங்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றன. இந்த நிலையில், கேரள திருவனந்தபுரத்தில் UGC வரைவு விதிகளுக்கு எதிராக தேசிய கருத்தரங்கு நடந்தது.

இதில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா துணை முதலமைச்சர் பட்டி விக்ரமர்க மல்லு, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் மத்திய பாஜக அரசின் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்திய பினராயி விஜயன், "உலக நாடுகள் புதியவற்றை கண்டுபிடிக்க பணம் செலவிடும் நேரத்தில், புராணங்களை உண்மை எனக் கூறி மத்திய அரசு செலவு செய்து வருகிறது. இந்திய வரலாற்றை மாற்றி எழுத முயற்சி செய்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

கொந்தளித்த பினராயி விஜயன்:

தொடர்ந்து பேசிய அவர், "கல்வி, விவசாயம், மின்துறை உள்பட பல துறைகள் சார்ந்து மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இவை, மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் நோக்கில் உள்ளது. மாநில அரசுக்கான நிதியை அபகரிக்கும் நோக்கில் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது" என்றார்.

தொடர்ந்து ஆளுநர் விவகாரம் குறித்து பேசிய அவர், "ஆளுநர்கள் நெருப்புடன் விளையாடுவதாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கேரளா, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்ட அதிகாரத்தை மீறி செயல்பட முனைந்தனர்" என்றார்.

முன்னதாக, இந்திய மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய பினராயி விஜயன், "உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர் யாரும் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு சிறையிலிருந்து விடுதலை பெற விரும்ப மாட்டார்கள், ஆனால், சாவர்க்கர் அதைச் செய்தார். சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக இருந்த சங்கப் பரிவார் அவருக்கு வீரன் என்ற பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறது" என்றார்.

 

தலைப்பு செய்திகள்

SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
ஓணம் சத்யா: 26 பாரம்பரிய உணவுகள்... என்னென்ன தெரியுமா?
ஓணம் சத்யா: 26 பாரம்பரிய உணவுகள்... என்னென்ன தெரியுமா?
விபத்தில் சிக்கிய சைக்கிள்... வெளியே வந்த குடல்.. சட்டையைக் கொண்டு சிறுவன் செய்த செயல்
விபத்தில் சிக்கிய சைக்கிள்... வெளியே வந்த குடல்.. சட்டையைக் கொண்டு சிறுவன் செய்த செயல்
ஆய்வுக்கு வந்த கல்வி அமைச்சர்.. வாடகைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள்.. வெடித்த சர்ச்சை!
ஆய்வுக்கு வந்த கல்வி அமைச்சர்.. வாடகைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள்.. வெடித்த சர்ச்சை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Karunanidhi: ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Embed widget