Kerala CM Pinarayi Vijayan: கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்ற வாகனம் விபத்து: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்.!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்ற கான்வாய் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் எஸ்கார்ட் வாகனங்கள் விபத்துக்குள்ளானதில், காயமின்றி பினராயி விஜயன் தப்பித்தார்.
முதலமைச்சர் கான்வாய் விபத்து:
திருவனந்தபுரம் வாமனபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் எஸ்கார்ட் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென எஸ்கார்ட் வாகனங்களுக்கு முன்னால், இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் குறுக்கே சென்றார். இதையடுத்து ஸ்கூட்டர் ஓட்டுநர் மீது மோதலை தவிர்க்க முற்பட்ட வேளையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில், கான்வாயில் இருந்த ஐந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.
எஸ்கார்ட் வாகனங்களில் இருந்த ஓட்டுநர், ஸ்கூட்டர் ஓட்டுநர் மீது மோதலை தவிர்க்க முற்பட்ட வேளையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
முதலமைச்சரின் வாகனம் சிறிதளவு சேதம் அடைந்தாலும், முதல்வர் காயமின்றி தப்பியதாக தகவல் தெரிவிக்கின்றன.
விபத்தின் வீடியோ காட்சிகள்:
Thiruvananthapuram: The escort vehicles of Kerala Chief Minister Pinarayi Vijayan were involved in an accident in Vamanapuram, Thiruvananthapuram after a scooter rider abruptly crossed in front of the vehicles. This sudden manoeuvre led to a collision involving five vehicles in… pic.twitter.com/WSAjJhKeyg
— Pinky Rajpurohit 🇮🇳 (@Madrassan_Pinky) October 28, 2024