Kedarnath Dham: புகழ்பெற்ற கேதார்நாத் கோயில்; 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு - ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்..!
கேதார்நாத் கோயில் 6 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. கோயில் திறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
Kedarnath Dham : கேதார்நாத் கோயில் 6 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. கோயில் திறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
கேதார்நாத் கோயில்
கேதர்நாத் கோயில் இந்தியாவின் 12 ஜோதிலிங்க சிவத் தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில்,கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது.
இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். ரிஷிகேஷில் இருந்து 223 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து 3,583 மீ (11,755 அடி) உயரத்தில் உள்ளது.
பக்தர்கள் அனுமதி:
இக்கோயில் ஒரு சக்திவாய்ந்த கோயில் ஆகும். கருவறைக்கு எதிரே நந்தி சிலை உள்ளது. இக்கோவிலின் பூசாரிகள் இக்காலங்களில் இங்கிருக்கும் மூலவர் சிலையை கீழே குப்தகாசி அல்லது ஊகிமட்டுக்கு எடுத்து சென்று அங்கு வைத்து பூஜைகளைத் தொடர்ந்து செய்வர். அதேபோல இங்கு வசிக்கும் அனைவரும் , இக்காலங்களில் கேதாரை விட்டு வெளியேறி ஆறுமாதங்களுக்கு பின்பே வருவர். பக்தர்கள் இக்காலங்களில் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுவர்.
நடை திறக்கப்படும் நாட்களில் காலை முதல் இரவு வரை கோவிலில் பால் போக், மகா அபிஷேகம், ருத்ரா அபிஷேகம், அஷோடார், சிவ அஷ்டோத்திரம், சிவ சகஸ்கரநாமம், சிவ நாமாவளி, சிவ மகிமை எனும் பூஜைகளும், அர்ச்சனைகளும் தொடர்ந்து நடைபெறும். கோடைக்காலமே ஆனாலும் இங்கு இரவில் காணப்படும் குளிர் மிகக் கடுமையானது.
மீண்டும் திறப்பு
அதன்படி, கேதார்நாத் கோயில் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 8.30 மணிக்கு மூடப்பட்டது. கோயிலை மூடுவதற்கு முன் சிறப்பு பூஜைகள், பல்லக்கு தூக்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில், சுமார் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கேதர்நாத் கோயில் இன்று திறக்கப்பட்டது. கோயிலை திறக்கப்படுவதற்கு முன், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், 20 குவிண்டால் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் நடை திறக்கப்பட்டது. இந்த கோயில் திறப்பு பூஜைக்கு பக்தர்கள் காலை 6.30 மணியில் இருந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடும் பனிப்பொழிவு:
இருப்பினும் யாத்திரை செல்லும் பாதையில் கடுமையான பனிப்பொழி இருப்பதால் முன்பதிவை உத்தரகாண்ட் அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, "உத்தரகாண்ட் கேதார்நாத் பாதையில் வரும் வாரத்தில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும்" என்று தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் பேரில் கேதார்நாத் கோயிலின் வருகை முன்பதிவை உத்தரகாண்ட் அரசு நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Indonesia Earthquake: இந்தோனேஷியாவில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை