Watch Video: பதில்சொல்ல முடியாமல் திணறிய கல்லூரி முதல்வர்... பளாரென அறைவிட்ட எம்.எல்.ஏ.. அதிர்ந்துபோன மக்கள்..
கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நல்வாடி கிருஷ்ணராஜ வாடியார் ஐடிஐ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சமீபத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று புதுப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் ஐடிஐ கல்லூரியில் ஆய்வு பணிக்காக சென்றிருந்த அமைச்சர் ஒருவர் அக்கல்லூரியின் முதல்வரை அடித்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நல்வாடி கிருஷ்ணராஜ வாடியார் ஐடிஐ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சமீபத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று புதுப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று நடந்த திறப்பு விழாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.எம்.ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டார்.
அப்போது கணினி ஆய்வகத்தைப் பார்வையிட்ட ஸ்ரீனிவாஸ் அங்கு நடந்த பணிகள் குறித்து ஐடிஐ கல்லூரி முதல்வர் நாகநாத்திடம் கேள்விகளை எழுப்பினார். ஆனால் அப்போது அந்த இடம் குறுகியதாக இருந்ததால் கல்லூரி முதல்வர் பின்னால் நின்றிருந்தார். அவரை முன்னே வருமாறு அழைத்து கேட்டுள்ளார். ஆனால் முதல்வர் நாகநாத் பதிலில் திருப்தியில்லாததால் யாரும் எதிர்பாராத வகையில் எம்.எல்.ஏ.எம்.ஸ்ரீனிவாஸ் அவரை திட்டியதோடு மட்டுமல்லாமல் சக அரசியல்வாதிகள், கல்லூரி ஊழியர்கள் முன்னிலையில் பளார் என இரண்டு முறை அறைந்தார்.
#Karnataka: A JD(S) MLA Srinivas slapped a college principal who was not able to provide clear answer about the ongoing development work for a computer lab.
— IANS (@ians_india) June 21, 2022
The incident, which happened on Monday, has created a huge outrage among the public. pic.twitter.com/WFnwK280Sg
இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், பொதுமக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எம்.எல்.ஏ. ஸ்ரீனிவாஸ்க்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர் சங்க மாண்டியா மாவட்டத் தலைவர் ஷம்பு கவுடா இதுதொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மேலும் சங்கத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி கல்லூரி முதல்வர் மீதான தாக்குதல் குறித்த விவரங்களை எடுத்துக் கூறினார்.
இதனையடுத்து முதல்வர் நாகாநந்தையும் சந்தித்து அவர் மீதான தாக்குதல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கும் வகையில், முழு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் எனவும் ஷம்பு கவுடா கூறியுள்ளார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்