அடடே! வெள்ளி, திங்கள் என இத்தனை நாட்களா! அரசு வெளியிட்ட விடுமுறை பட்டியல்..!
கர்நாடகா அரசு இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று கூடுதல் விடுமுறைகளுடன் சேர்த்து 25 பொது விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கர்நாடகா அரசு இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று கூடுதல் விடுமுறைகளுடன் சேர்த்து 25 பொது விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், குறிப்பிடத்தக்க வகையில், இவற்றில் ஒன்பது விடுமுறைகள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருவதால், 2024 ம் ஆண்டில் சில வாரங்கள் நீண்ட விடுமுறையை தர இருக்கிறது. இதன்மூலம், வேலைக்கு செல்லும் நபர்கள் மூன்று நாள் என்ற நீண்ட விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடலாம்.
கர்நாடக அரசு விடுமுறை:
கர்நாடக அரசின் விடுமுறையின்படி, வரவிருக்கும் ஜனவரி 15- உகாதி, செப்டம்பர் 16- ஈத் மிலாத், நவம்பர் 18 - கனகதாச ஜெயந்தி விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்கள் அனைத்தும் திங்கள் கிழமைகளில் வருகிறது.
வெள்ளிக்கிழமை வரும் விடுமுறைகள்:
ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம், மார்ச் 8-ம் தேதி மகா சிவராத்திரி, மார்ச் 29-ம் தேதி புனித வெள்ளி, மே 10-ம் தேதி அக்ஷய திரிதியா, அக்டோபர் 11-ம் தேதி ஆயுதபூஜை, நவம்பர் 1-ம் தேதி கன்னட ராஜ்யோத்ஸவா, ஏப்ரல் 21-ம் தேதி மகாவீர் ஜெயந்தி ஆகிய நாட்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறது.
மேலும் சில விடுமுறைகள்..
அக்டோபர் 12 அன்று விஜயதசமி, இரண்டாவது சனிக்கிழமைகளிலும், அதே நேரத்தில் அம்பேத்கர் ஜெயந்தி ஏப்ரல் 14 அன்று ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருகிறது. மேலும், குடகு மாவட்டத்தில் செப்டம்பர் 3-ம் தேதி கைல் முஹூர்த்தம், அக்டோபர் 17-ம் தேதி துலா சங்கரமணம் மற்றும் டிசம்பர் 14-ம் தேதி ஹுத்தாரி ஆகிய நாட்களில் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 9 ஆம் தேதி கைல் முஹர்த்தம், செப்டம்பர் 17 ஆம் தேதி துலா சங்கரமாம் மற்றும் டிசம்பர் 14 ஆம் தேதி ஹுத்தாரி பண்டிகையை கொண்டாட குடகு மாவட்டத்தில் மட்டும் உள்ளூர் பொது விடுமுறையை அரசு அறிவித்துள்ளது.
பொது விடுமுறை நாட்களின் பட்டியல் பின்வருமாறு
1) 15-1-2024- மகர சங்கராந்தி, உத்தராயண புண்யகால
2) 26-1-2024- குடியரசு தினம்
3) 08-3-2024- மகாசிவராத்திரி
4) 29-3-2024- புனித வெள்ளி
5) 09-4-2024- உகாதி பண்டிகை
6) 11-4-2024- குத்ப்-இ-ரம்ஜான்
7) 01-5-2024- தொழிலாளர் தினம்
8) 10-5-2024- பசவ ஜெயந்தி மற்றும் அட்சய திருதியை
9) 17-6-2024- பக்ரீத்
10) 17 -7 -2024- முஹர்ரத்தின் கடைசி நாள்
11) 15-8-2024- சுதந்திர தினம்
12) 07-9-2024- விநாயக சதுர்த்தி
13) 16-9-2024- ஈத்-மிலாத்
14) 02-10-2024- காந்தி ஜெயந்தி /மஹாலய அமாவாசை
15) 11-10-2024-மகாநவமி, ஆயுதபூஜை
16) 17-10-2024- மகரிஷி வால்மீகி ஜெயந்தி
17) 31-10-2024- தீபாவளி
18) 01-11-2024 கன்னடம்
19) 02-11-2024- பலிபாட்யமி
20) 18-11-2024-கனகதாச ஜெயந்தி
21) 25-12-2024- கிறிஸ்துமஸ்