Karnataka: தர்மஸ்தலா கோயிலில் நீடிக்கும் மர்மம்.. பெண்கள், சிறுமிகள் உள்பட 100 பேர் கொன்று புதைப்பா?
கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் கோயில் அருகே தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள் போன்ற செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் கோயில் அருகில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த இடத்தில் தோண்ட தோண்ட எலும்புக்கூடுகளும், பெண்களின் உடலும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக இதுதொடர்பான செய்திகளே அதிகம் வெளிவந்த வண்ணம் உள்ளன.
100 உடல்களை புதைத்திருக்கிறேன்
தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற இடமாக மஞ்சுநாத சாமி கோயில் இருக்கிறது. ஊழியர் இரண்டு வாரத்திற்கு முன்பு, தூய்மைப் பணியாளர் ஒருவர் 1995 முதல் 2014 க்கு இடைபட்ட காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 100 உடல்களை வெவ்வேறு இடங்களில் புதைத்திருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். தனக்கு மேல் இருப்பவர்கள் மிரட்டி என்னை செய்ய வைத்தனர். அதனால் தான் அமைதியாக இருந்தேன். தற்போது இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். குற்ற உணர்வோடு இதற்கு மேலும் தன்னால் உயிரோடு இருக்கமுடியாது. எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு தேவை என்றும் கூறியிருக்கிறார்.
மகளை இழந்த தாய் புகார்
நேத்ராவதி ஆற்றின் கரையோரத்தில் உடல்களை புதைத்தேன். பலியானவர்களில் சிலர் மைனர் பெண்கள். பலர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு பள்ளி சீருடை, பையுடன் புதைக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் வாக்கமூலம் அளித்துள்ள நிலையில், இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தாமாக முன் வந்து காணாமல் போன தனது மகள் குறித்து பேட்டியளித்திருப்பது திருப்பத்தை ஏற்படுத்தயிருக்கிறது. உடல்கள் அடையாளம் காணப்பட்டால் டிஎன்ஏ சோதனைக்கு தயாராக இருப்பதாகவும் மகளை இழந்த தாய் கூறியுள்ளார்.
புலனாய்வுக்குழு
இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தாரமையா சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு டிஜிபி அந்தஸ்து பெற்ற காவல் அதிகாரி பிரணாப் மொஹாந்தி தலைமை வகித்துள்ளார். எனவே சட்ட விதிகளுக்குட்பட்டு எலும்புக்கூடுகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்ப இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், துப்புரவு பணியாளராக இருந்த பெண் கூறுவது உண்மைதானா, இதில் வெளிநாட்டு பெண்களும் இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.





















