Watch Video: சிக்னலில் நின்றிருந்த பெண் மீது மோதிய கார் - பதைபதைக்க வைக்கும் வீடியோ..!
மங்களூரில் பிஎம்டபிள்யூ கார் டிவைடரை தாண்டி ஸ்கூட்டியில் மோதியது தொடர்பான காட்சி சிசிடிவி கேமராவில் சிக்கியது:
மங்களூருவில் வேகமாக வந்த கார் டிவைடரை தாண்டி இருசக்கர வாகனத்தில் இருந்து மீது மோதியதில் பெண் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது.
கர்நாடக மாநிலம் மங்களூருவின் பல்லால்பாக் பகுதியில் நேற்று வேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் டிவைடரை தாண்டி ஸ்கூட்டி மற்றும் இரண்டு வாகனங்கள் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் படுகாயமடைந்தார். ப்ரீத்தி மனோஜ் (47) என்ற பெண் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், கார் ஒன்றில் இருந்த அமய் ஜெயதேவன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பிஎம்டபிள்யூ காரை ஓட்டிச் சென்றவர் மன்னகுடாவைச் சேர்ந்த ஷ்ரவன் குமார் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சாலையைக் கடப்பதற்காக டிவைடரில் நின்றிருந்த மற்றொரு பெண், சாலையின் மறுபுறத்தில் இருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், கார் வேகமாகச் சென்றதால் உயிர் தப்பினார். காரை ஓட்டி வந்தவரை பொதுமக்கள் சராமரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பிஎம்டபியூகார் டிரைவர் குடிபோதையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
On Saturday afternoon, an Over speeding #BMW jumped a divider and crashed into the car and a 2 wheeler on the otherside of the road,injuring two persons at Ballalbagh in #Mangaluru . Police have taken BMW driver in custody. pic.twitter.com/fD8bVz1TrJ
— Yasir Mushtaq (@path2shah) April 9, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்