மேலும் அறிய

Hijab Row : ஆறு வயது சீக்கிய சிறுவனை பட்கா அணியக்கூடாது என சொன்ன பள்ளி நிர்வாகம்.. கர்நாடகாவில் முளைத்த சர்ச்சை

மங்களுருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் இந்த நடவடிக்கை குறித்து மாநில சிறார் நலவாரியம் சைல்ட்லைனை அறிக்கை வெளியிடச் சொல்லியிருக்கிறது. 

கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவனுக்கு ‘பட்கா’ என்னும் தலைப்பாகை அணிந்ததால் தனியார் பள்ளி ஒன்று அவருக்கு அனுமதி மறுத்ததாகக் கூறப்படும் மற்றொரு சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மங்களுருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் இந்த நடவடிக்கை குறித்து மாநில சிறார் நலவாரியம் சைல்ட்லைனை அறிக்கை வெளியிடச் சொல்லியிருக்கிறது. 
சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 'பட்கா' மற்றும் 'காரா'  என்னும் ஒரு வகை எஃகு வளையல் அணிய அனுமதி உண்டு எனவும் வாரியத் தலைவர் ரென்னி டி'சோசா தெரிவித்துள்ளார்.மேலும், “வகுப்பறைக்குள் ஹிஜாப்  அணியக் கூடாது என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு பள்ளி நிர்வாகத்தின் ஒட்டுமொத்தமாக மண்டியிட்டு இதுபோலச் செயல்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.

கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்களில் இசுலாமியப்பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு கல்வி நிர்வாகம் தடைவிதித்தது. இதனையடுத்து, உடுப்பி மாவட்டத்தில் ஹிபாஜ் உடையுடன் வந்த ஆறு மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய முடியாதபடி தடுத்து நிறுத்தப்பட்டனர்.  இது, மிகவும் விவாதப்பொருளாக மாறியது. ஹிஜாப் விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தின் முடிவை அம்மாநில பாஜக வரவேற்றது. மேலும், சில தீவிர இந்துத்துவ அமைப்புகள் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக உடன் படிக்கும் சக மாணவர்களை ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதற்கிடையே, தங்களது மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு கல்வி நிர்வாகம் அனுமதி அளிக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஆறு மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த, மனு மீதான விசாரணை கடந்த 8 நாட்களாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், மாணவர்கள் தங்கள் மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு கல்வி நிர்வாகம் விதித்த தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. 

இந்நிலையில், மனுதாரர்களின் ஒருவரான 'Hazra Shifa' என்ற மாணவியின் குடும்ப உறப்பினர்களை சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த கும்பல் வன்முறையாளர்கள் தாக்கியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. 

பாதிக்கப்பட்ட அப்பெண் தனது ட்விட்டரில், " எனது சகோதரன் கும்பல் வன்முறையாளர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டான்.  எனது ஹிஜாப் உரிமையைப் பற்றி தொடர்ந்து பேசியதற்காகவா? எங்களது சொத்துக்களைச் சேதப்படுத்தியுள்ளனர். எனது உரிமையைப் பற்றி பேசக் கூடாதா? போராடி பெறக் கூடாதா? அவர்களின் அடுத்த தாக்குதலுக்கு யார் பாதிப்புக்குள்ளாக போகின்றனர்? இந்த சங் பரிவார் கும்பல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget