Kanpur : மாரடைப்பால் உயிரிழந்த அரசு அதிகாரி..! கோமாவில் இருப்பதாக ஒன்றரை வருடம் நினைத்த குடும்பம்..! கங்கை நீரை தெளித்துவந்த அவலம்..!
மனநிலை சரியில்லாதவராகத் தோன்றும் அவரது மனைவி, கோமாவில் இருந்து வெளியில் வர உதவும் என்று நம்பி, தினமும் காலையில் அவரது சிதைந்த உடலில் 'கங்கை நீரை' தெளித்து, வந்துள்ளார்.
கடந்த ஆண்டு இறந்த வருமான வரித் துறை ஊழியரை அவரது குடும்பத்தினர் அவர் கோமாவில் இருப்பதாகக் கருதி கிட்டத்தட்ட 18 மாதங்கள் வீட்டில் வைத்திருந்த வினோதமான சம்பவம் நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
கோமாவில் இருப்பதாக எண்ணிய குடும்பத்தினர்
ஒரு தனியார் மருத்துவமனையால் வழங்கப்பட்ட அவரது இறப்புச் சான்றிதழில், அவர் ஏப்ரல் 22, 2021 அன்று மாரடைப்பு காரணமாக இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது. வருமான வரித்துறையில் பணியாற்றிய விம்லேஷ் தீட்சித் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறந்துள்ளார், ஆனால் அவர் கோமா நிலையில் இருப்பதாக நம்பிய அவரது குடும்பத்தினர் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்யாமல் வீட்டில் வைத்து பார்த்துள்ளனர் என்று தலைமை மருத்துவ அதிகாரி (CMO) டாக்டர் அலோக் ரஞ்சன் தெரிவித்தார். மனநிலை சரியில்லாதவராகத் தோன்றும் அவரது மனைவி, கோமாவில் இருந்து வெளியில் வர உதவும் என்று நம்பி, தினமும் காலையில் அவரது சிதைந்த உடலில் 'கங்கை நீரை' தெளித்து, வந்துள்ளார்.
உடன் வேலை செய்பவர்கள் மூலம்…
ஆலோக் ரஞ்சன் மேலும் பேசுகையில், "அவரோடு வேலை செய்த, கான்பூரின் வருமான வரித்துறை அதிகாரிகளால் எனக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது, குடும்பத்தினர் ஓய்வூதியக் கோப்புகளை குறித்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதால் இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்," என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்: உருக உருக காதலித்தும் உள்ளம் நோகுதா! ஜாலியா படிங்க லவ் ராசிபலன்கள்!
கோமாவில் இருப்பதாக கூறிய குடும்பத்தினர்
காவல்துறையினர் மற்றும் மாஜிஸ்திரேட் ஆகியோருடன் சுகாதார அதிகாரிகள் குழு வெள்ளிக்கிழமை ராவத்பூர் பகுதியில் உள்ள தீக்ஷித்தின் வீட்டை அடைந்தபோது, அவரது குடும்ப உறுப்பினர்கள் அவர் உயிருடன் இருப்பதாகவும் கோமா நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
அழுகிய நிலையில் சடலம்
மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகு அவரது உடலை லாலா லஜ்பத் ராய் (எல்.எல்.ஆர்) மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல சுகாதாரக் குழுவை அவரது குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவ பரிசோதனைகள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தன. இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்ய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகளை விரைவில் சமர்ப்பிக்குமாறும் சிஎம்ஓ கூறியது. சடலம் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தீட்சித்தின் குடும்பத்தினரும் அவர் கோமா நிலையில் இருப்பதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளனர். அவரது மனைவி மனநிலை சரியில்லாமல் இருப்பதாகத் தெரிகிறது, என பெயர் கூறாத அதிகாரி ஒருவர் கூறினார். குடும்பத்தினர் அடிக்கடி ஆக்சிஜன் சிலிண்டர்களை வீட்டிற்கு எடுத்துச் செல்வதைக் பார்த்ததாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையிடம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.