மேலும் அறிய

நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்ட பெண் சடலம்.. விட்டு ஓடுவதா? என்ன மாதிரியான தோழி அவர்? மகளிர் ஆணையத் தலைவர் ஆவேசம்..

விபத்து நடந்த பிறகும், வாகனத்தின் அடியில் சிக்கி கொண்ட அந்த பெண் 12 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

டெல்லியில் இளம்பெண் ஒருவரின் ஸ்கூட்டி மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. விபத்து நடந்த பிறகும், வாகனத்தின் அடியில் சிக்கி கொண்ட அந்த பெண் 12 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

மாருதி சுசுகி பலேனோ காரில் ஐந்து பேர் இருந்ததாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் கிரெடிட் கார்டு சேகரிப்பு முகவர், ஓட்டுநர் மற்றும் ரேஷன் கடை உரிமையாளர் ஆகியோர் அடங்குவர் என காவல்துறை  தெரிவித்துள்ளது.

டெல்லி சுல்தான்புரியில் புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவில் தொடங்கிய சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் மோதி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் அஞ்சலி (20) உயிரிழந்தார். அவரது ஸ்கூட்டியில் மோதிய பிறகு, கார் 10-12 கிமீ தூரம் சென்றது, காரின் அடிப்பகுதியில் அவரது கைகால்கள் சிக்கிக்கொண்டன என்று போலீசார் தெரிவித்தனர்.

அந்தப் பெண்ணின் தாயார் ரேகா, தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என கூறினார். "அவளுடைய ஆடைகளை முழுவதுமாக கிழிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அவர்கள் அவளைக் கண்டுபிடிக்கும் போது அவளது உடல் முழுவதும் நிர்வாணமாக இருந்தது. எனக்கு முழு விசாரணையும் நீதியும் வேண்டும்," என்று அவர் கூறினார்.

பெண்ணின் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.  பிரேத பரிசோதனை அறிக்கையில், ” பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் எந்த காயமும் இல்லை. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை" எனவும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

அவரது தலை, முதுகுத்தண்டு, இடது தொடை எலும்பு மற்றும் கீழ் முட்டுகளில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் ரத்தக் கசிவு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது தோழியும் அவர்களது நண்பர்களுடன் பார்ட்டியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதை வைத்து சிலர் பாதிக்கப்பட்ட பெண்ணை கடுமையாக விமர்சித்தனர்.

இதை கடுமையாக சாடியுள்ள டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால், பாதிக்கப்பட்டவர்கள் மீது குறை கூறுவதை நிறுத்துங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "தொலைக்காட்சியில் காலையில் இருந்து ஹோட்டல் உரிமையாளரின் இழிவான கருத்துகள் காட்டப்படுகின்றன. அந்த பெண்கள் மது அருந்திவிட்டு சண்டையிட்டுக் கொண்டதாகவும் எனவே அவர்களை ஹோட்டலில் இருந்து வெளியேற்றியதாகவும் அவர் கூறியுள்ளார். 

குடிபோதையில் பெண்கள் சண்டையிட்டிருந்தால் போலீஸ் வரவழைக்கப்பட்டிருக்கும். அவர்கள் ஏன் இரவில் தாமதமாக ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்? அவர்கள் போதையில் இருந்ததற்கான ஆதாரம் எங்கே? பாதிக்கப்பட்டவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள்" என பதிவிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget