மேலும் அறிய

ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!

ஃப்ரீலான்சிங் மூலம் சம்பாதிக்கும் பணத்திற்கு வரி உண்டா? அப்படி இருந்தால் எப்படி வரி செலுத்த வேண்டும்? இதை சம்பளம் என்று கணக்கில் கொள்ளலாமா?

இன்றெல்லாம் பலர் பல்வேறு வேலைகளுக்கு செல்வதை விட வீட்டில் இருந்தபடியே ஃப்ரீலான்சிங் செய்து சம்பாதிக்கின்றனர். இப்படி நிறுவங்களுக்கு வெளியில் இருந்து வேலை செய்யும் கிக் கலாச்சாரம் தமிழகத்தில் பிரபலமாகி வருகிறது. இவர்களுக்கும் மாத சம்பளக்காரர்களைப் போலவே அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது.


ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!

ஃப்ரீலான்சிங் மூலம் சம்பாதிக்கும் பணத்திற்கு வரி உண்டா? அப்படி இருந்தால் எப்படி வரி செலுத்த வேண்டும்? இதை சம்பளம் என்று கணக்கில் கொள்ளலாமா? இப்படி பல கேள்விகள் உங்களுக்கு வரும். அதற்கான விடையை இந்தப் பதிவில் பார்ப்போம். ஒருவர் ஒரு கம்பெனியில் சேர்ந்து 9 முதல் 6 மணி வரை வேலை செய்கிறார். அவருக்கு ஒரு பாஸ் இருப்பார். அதேபோல மாதா மாதம் சம்பளமும் கைக்கு வந்துவிடும். இதை சம்பள வருமானமாகவே வருமானவரித்துறை கருதும்.

அதுவே எந்த ஒரு பணி நேரமும் இன்றி ஒரு நபர் பல நிறுவனங்களுக்காக வேலை செய்து வருமானம் பார்க்கிறார். ஒரே நேரத்தில் 3 முதல் 4 நிறுவனங்களுக்காக வேலை செய்கிறார். எப்போது வேலை செய்ய வேண்டும்? எவ்வளவு வேலை செய்ய வேண்டும்? என்பதை எல்லாம் அவரே முடிவு செய்கிறார் என்றால் அது ஃப்ரீலான்சிங் வருமானமாக கருதப்படும். ஏனெனில் அவருக்கு கிடைக்கும் வருமானம் அந்த மாதத்தில் அவர் செய்யும் வேலையை பொறுத்தது.


ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!

ஒரு மாதத்தில் அதிக வேலை செய்தால் அதிக வருமானம் கிடைக்கும். இல்லை என்றால் வருமானம் இருக்காது. எனவே ஃப்ரீலான்சர்கள் மற்றும் கிக் தொழிலாளர்கள் தங்களுடைய ஆண்டு வருமானம் ரூ.75 லட்சம் வரை இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய வருமானத்தில் 50 சதவீதம் வரையிலான தொகைக்கு மட்டும் வரி கட்டினால் போதும். அதுவே ஆண்டு வருமானம் ரூ.3 கோடி வரை இருந்தால் அதற்கேற்ப வரி செலுத்த வேண்டும்.

பல பிரீலான்ஸர்கள் தங்களுடைய வருமானத்தை தொழில் வருமானமாக கணக்கு காட்டுகின்றனர். ஆனால் எல்லா ஃபிரீலான்ஸர்களும் இதை செய்யக்கூடாது. உங்களுடைய வருமானம் எந்த கணக்கில் வரும் என்பதை தீர்மானிக்க 3 விஷயங்களை கவனிக்க வேண்டும். உங்கள் வேலையின் தன்மை என்ன?, குறிப்பிட்ட நேர காலமின்றி நீங்கள் எவ்வளவு சுதந்திரமாக வேலை செய்கிறீர்கள்?, உங்களுக்கும், உங்களுக்கு வேலை கொடுத்த நிறுவனத்திற்கும் இடையே இருக்கும் ஒப்பந்தம் என்ன சொல்கிறது? என்பதை எல்லாம் பொருத்துதான் வருமான வரி செலுத்த வேண்டும்.

உதாரணமாக நீங்கள் ஃப்ரீலான்சிங் வேலை செய்தால் அது சுய தொழில் வருமானத்தின் கீழ் வரும். அதுவே ஒரு நிறுவனத்தின் கீழ் வேலை செய்தால் அது சம்பளம் வருமானமாக கணக்கில் கொள்ளப்படும். சில ஃபிரீலான்ஸர்கள் வருமானத்தை குறைத்து காட்டுவது, டிடிஎஸ் விவரங்களை கவனிக்காமல் விட்டுவிடுவது, வரியை குறைப்பதற்காக செலவுகளை கணக்கில் காட்டுவது போன்றவற்றையெல்லாம் செய்கின்றனர். இதனால் நோட்டீஸ் வருவதற்கு வாய்ப்புண்டு.


ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!

ஃபிரீலான்ஸர்கள் கம்பெனி பிடித்தம் செய்த டிடிஎஸ், அரசின் 26 ஏஎஸ் மற்றும் anual information சிஸ்டம் போன்ற ஆவணங்களில் பதிவாகி இருக்கும் தொகை ஆகியவற்றையெல்லாம் வரிக் கணக்குடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதேபோல சொந்த செலவுகளை எல்லாம் கணக்கில் காட்டி வரியை குறைக்க கூடாது.

வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் நீங்கள் செலுத்திய பில்கள் போன்றவை அரசின் anual information சிஸ்டமில் சரியாக இருக்கிறதா? என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வருமானம் மற்றும் செலவுகளை கணக்கில் காண்பிக்க சரியான சான்றுகளை வைத்திருக்க வேண்டும். ஃப்ரீ லான்சிங் வருமானம் பெறுபவர்கள் சரியான படிவத்தைத் தேர்ந்தெடுத்து வரித் தாக்கல் செய்ய வேண்டும். நிறுவனங்கள் பிடித்தம் செய்துள்ள டிடிஎஸ் தொகையை பெறுவதற்கு தகுந்த படிவத்தை நிரப்பி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget