Jharkhand : ஜார்காண்ட் மாநிலத்தில் பதுங்கியிருந்த ஐந்து நக்சலைட்கள் சுட்டுக்கொலை!
Jharkhand : ஜார்காண்ட் மாநிலத்தில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்காண்ட் மாநிலத்தில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சத்ரா பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளும் பணமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் தாக்குதல் அதிகமாக நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் இன்று (ஏப்ரல் 03) போலீசாருக்கு நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சண்டை நடைபெற்றது. இதில் 5 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜார்க்கண்ட் போலீசார் தெரிவிக்கையில்.” சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து 2 ஏகே 47 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. 5 பேரில் இருவரிடம் தலா ரூ.25 லட்சமும், மற்ற இருவரிடம் தலா ரூ.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளோம். பயங்கரவாத செயலில் ஈடுபடும் நக்சலைட்டுகளுக்கு எதிராக என்கவுன்டர் ஆப்ரேஷன் தொடர்கிறது.” என்று தெரிவித்தார்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் சுமன் சிங், சஞ்சய் குமார் உசெண்டி, பரஸ்ராம் தங்கல் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கனவே பல்வேறு குற்றங்களில் தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க..