(Source: ECI/ABP News/ABP Majha)
Tirupati Temple: திருப்பதி கோயிலில் கடந்த நிதியாண்டில் மட்டும் இவ்ளோ வசூலா? ஆச்சரியப்படவைக்கும் தகவல்..
2022-23 நிதியாண்டில் திருப்பதியில் ரூ.1,520 கோடி காணிக்கை பெறப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 நிதியாண்டில் திருப்பதியில் ரூ.1,520 கோடி காணிக்கை பெறப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயில் உலகின் பணக்கார கோயில்களின் ஒன்றாகும். திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்ய வருவார்கள். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். இங்கு வரும் மக்கள் சுவாமியை தரிசனம் செய்த பின் உண்டியலில், மனம் விரும்பும் தொகையை காணிக்கையாக அளிப்பார்கள்.
திருப்பதி உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை குறித்து கேள்விப்பட்டு நாம் வியந்தது உண்டு. கடந்த ஆண்டு மட்டும் மாதந்தோறும் ரூபாய் 100 கோடிக்கு மேல் மக்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 2.37 கோடி பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு 2.37 கோடி மக்கள் ரூபாய் 1,450 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
2021-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2022-ஆம் ஆண்டு பக்தர்கள் அதிகமாக வந்துள்ளனர். 2021-ஆம் ஆண்டு 1.04 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 2021-ஆம் ஆண்டில் ரூபாய் 883.41 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும் 2022 – 2023 ஆம் நிதியாண்டின் படி ரூபாய் 1520.29 காணிக்கை செலுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிகப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமி முடிந்து 3 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறும். அதன்படி இந்தாண்டு வசந்த உற்சவம் நாளை (ஏப்ரல் 4ஆம் தேதி) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. வசந்த உற்சவம் ஏப்ரல் 6ஆம் தேதி நிறைவடைகிறது.
2020 ஆம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவி வந்த நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது தேவஸ்தானம். இதன் காரணமாக 2021ஆம் ஆண்டு வரை பக்தர்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது. 2022ஆம் ஆண்டு முதல் ஒருசில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் வழக்கம்போல் வரத்தொடங்கினர். திருப்பதி கோயிலில் பிரம்மோத்சவம், மார்கழி மாதம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட விஷேச காலங்களில் மக்கள் அதிகமாக வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Kerala Train Fire: ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த நபர்... சிக்கிய ஆதாரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்
தஞ்சை அருகே பஸ் கவிழ்ந்து சிறுவன், மூதாட்டி பலி; 40 பேர் காயம்