Cyclone Jawad: 12 மணி நேரத்தில் ஜாவத் புயல்... டிசம்பர் 2வது வாரத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி!
அந்தமான் அருகே வங்கக்கடலில் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஜாவத் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஜாவத் புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், அந்தமான் அருகே வங்கக்கடலில் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், தமிழ்நாட்டை நோக்கி நகரும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பு இல்லை எனவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
Depression intensified into Deep Depression over westcentral adjoining southeast Bay of Bengal at 0530 IST of 3rd Dec 2021. To intensify into a Cyclonic Storm during next 12 hours & reach north Andhra Pradesh-Odisha coast by tomorrow morning.
— India Meteorological Department (@Indiametdept) December 3, 2021
ஜாவத் புயல் நாளை காலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே நாளை காலை தீவிர புயலாக கரையை கடக்கும். இந்தப் புயல் கரையைக் கடக்கும்போது 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்றுவீசக்கூடும். ஜாவத் புயலின் காரணமாக ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பைத் தவிர்க்கவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடவும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் தயார் நிலையில் உள்ளனர்.
முன்னதாக, ஜாவத் புயலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், மின்சாரம், தொலை தொடர்பு, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய சேவைகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பிரதமர் அறிவுறுத்தினார். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாகை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்