மேலும் அறிய

Jallikattu : தமிழ்நாடே எதிர்பார்ப்பு... ஜல்லிக்கட்டுக்கு தடையா? விலக்கா...? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு...!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான விலங்குகள் நல அமைப்புகளின் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.

Jallikattu :  ஜல்லிக்கட்டுக்கு எதிரான விலங்குகள் நல அமைப்புகளின் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.வி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பை அறிவிக்கிறது.

ஜல்லிக்கட்டு வழக்கு

பல நூற்றாண்டு காலமாக தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை பாரம்பரியமாக விளையாடி வருகின்றன. இந்த ஜல்லிக்கட்டானது ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும்.  அதிலும், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்து வரும் நிலையில், இந்த போட்டிகளின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி விலங்குகள் நல அமைப்பான பீட்டா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014ஆம் ஆண்டு உத்தரவிட்டது. 

இதனை அடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் 2017ஆம் ஆண்டு இளைஞர்கள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் நடத்த போராட்டமானது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. 

பேராட்டத்தை அடுத்து, அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் என்ற பெயரில் நிரந்தரச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

வாதங்கள்

ஆனாலும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய தொடர்ந்து முயற்சிக்கின்றன. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் காரசாராமான விவாதங்களும் நடைபெற்றன. ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா அமைப்புகள் முன்வைத்த பல வாதங்களை நீதிபதிகள் நிராகரித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வாதங்கள் நடைபெற்றன. அப்போது, பீட்டா தரப்பில், ”நாங்கள் 5 ஆண்டுகளாக ஆய்வு செய்து சேகரித்த தரவுகளைத்தான் தாக்கல் செய்திருக்கிறோம். எந்த ஒரு காளையும் ஜல்லிக்கட்டில் ஓட விரும்புவது இல்லை என்றும் இதுஒரு கொடூரமான விளையாட்டு என்றும் ஜல்லிக்கட்டில் காளைகள் கட்டாயமாக ஓட விடப்படுகின்றன” என்றும் பல வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதற்கு நீதிபதிகள், ”ஜல்லிக்கட்டு எப்படி கொடூரமான விளையாட்டு என்கிறீர்கள்? ஜல்லிக்கட்டில் ஆயதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. ஜல்லிக்கட்டில் கைகளால் தானே காளைகளை மனிதர்கள் அடக்குகின்றனர். இது எப்படி கொடூரமாகும்” என எதிர் கேள்வியை உச்சநீதிமன்றம் கேட்டது.

மேலும், ”ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தின் கலாச்சார நிகழ்ச்சி என்றும், ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு எந்த கொடுமையும் இழக்கப்படுவதில்லை. ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு, கேளிக்கை அல்ல. வரலாற்று, கலாச்சார வாய்ந்த நிகழ்வு என்று" என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடியது.

இன்று தீர்ப்பு

இவ்வாறாக அனைத்து தரப்பு வாதங்களும் நடத்து முடிந்து, தீர்ப்பு மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது இன்று (மே 18) தீர்ப்பு அறிவிக்கப்படுகிறது. நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.வி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பை அறிவிக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Embed widget