மேலும் அறிய

ISRO: கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய இஸ்ரோ.. நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்..

கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஜிதேந்திர சிங், இந்த வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவுவதன் மூலம் உருவாக்கப்பட்ட அந்நிய செலாவணி தோராயமாக 94 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 46 மில்லியன் யூரோக்கள் ஆகும் என்றார்.

ஜனவரி 2018 முதல் நவம்பர் 2022 வரை, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லக்சம்பர்க், மலேசியா, நெதர்லாந்து, கொரியா குடியரசு, சிங்கப்பூர், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா  போன்ற நாடுகளைச் சேர்ந்த 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.  பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி-மார்க்III ஏவுகணைகள் மூலம் வணிக ஒப்பந்தத்தின் கீழ் இவை விண்ணில் செலுத்தப்பட்டது.

இத்துறையில் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், விண்வெளி நடவடிக்கைகளில் வர்த்தகம் சார்ந்த அணுகுமுறையை கொண்டு வரவும் - உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் நாட்டின் பங்கை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கொண்டு வருவதற்கான நோக்கத்துடன் ஜூன் 2020 இல் தொலைநோக்கு முறையில் மாற்றம் அறிவிக்கப்பட்டன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்தச் மாற்றங்களினால், 36 ஒன்வெப் (36 oneweb satellite) செயற்கைக்கோள்களைச் LVM3 வடிவில் சுமந்து செல்லப்பட்டது. இது இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வணிகரீதியான ஏவுதல் ஆகும். மற்றும் Skyroot Aerospace இன் சமீபத்திய துணைவிமானப் பயணமும் மேற்கொள்ளப்பட்டது.  

ஜிதேந்திர சிங், IN-SPAce ஐ ஒற்றைச் சாளர ஏஜென்சியாக உருவாக்கி, அரசு சாரா நிறுவனங்களை இறுதி வரையிலான விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் குறிப்பாக  111 விண்வெளி-தொடக்கங்களுடன், ஸ்டார்ட்-அப் சமூகத்தில் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.   

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறும்.  குளிர்கால கூட்டத்தொடர், மொத்தம் 17 வேலை நாட்கள் நடைபெறும். அமர்வின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கபூர்வமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  பிரதமர் மோடியின் உரையில் நாடு சுதந்திரம் அடைந்ததின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடிவரும் நேரத்தில் ‘ Azadi Ka Amrit Mahotsav ’ நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பது சிறப்பானது. 

குடியரசுத் தலைவர் திரெளபது முர்மு மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர்களையும் பிரதமர் பாராட்டினார். மாநிலங்களவை மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். 

கூட்டத் தொடர் முக்கியமானது:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ” இந்த கூட்டத் தொடர் மிகவும் முக்கியமானது. இதில் அனைத்து கட்சிகளும் கருத்தொற்றுமையுடன் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார். மேலும், இந்த கூட்டத் தொடரில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில் கூட்டத் தொடர் நடைபெறுவது முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
Embed widget