(Source: ECI/ABP News/ABP Majha)
IRCTC Offers: அதிரடி சலுகை அறிவித்த ஐ.ஆர்.சி.டி.சி - விமான டிக்கெட்டிற்கு ரூ. 2000 வரை ஆஃபர், சேவை கட்டணமும் கிடையாது
IRCTC Offers : விமான டிக்கெட்டுகளுக்கான இந்த சிறப்புச் சலுகை 3 நாட்களுக்கு (செப்டம்பர் 27 வரை ) மட்டுமே இருக்கும், என ஐ.ஆர்.சி.டி.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IRCTC Offers: ஐ,ஆர்.சி.டி,சி., இணையதளம் மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், சேவைக் கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஆர்.சி.டி,சி. சலுகை அறிவிப்பு:
வரும் செப்டம்பர் 27ம் தேதியன்று உலக சுற்றுலா தினத்துடன், ஐ.ஆர்.சி.டி.சி தோற்றுவிக்கப்பட்டதன் 24வது நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி வாடிக்கையாளர்களுக்கு தாராளமான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, ”மூன்று நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 25 முதல் 27 வரை, IRCTC தனது இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கான சேவைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை கால சலுகை:
இந்த சிறப்பு சலுகை குறிப்பிட்ட காலத்தில் பயணிகளுக்கு செலவு-சேமிப்பு வாய்ப்பை வழங்கும் என ஐ.ஆர்.சி.டி.சி., நம்பிக்கை தெரிவித்துள்ளது. சேவை கட்டணங்களை நீக்குவதுடன், ஐஆர்சிடிசி பல்வேறு வங்கி அட்டை பரிவர்த்தனை தள்ளுபடிகளை அறிமுகப்படுத்தி, விமான டிக்கெட்டுகளில் ரூ.2000 வரை சேமிப்பை வழங்குகிறது. இந்த கவர்ச்சிகரமான சலுகைகள் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் விமானத்தில் பயணிக்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு உதவிரகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. தங்களது விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை 100 நாட்களுக்கு முன்பே திட்டமிட்டுள்ள பயனாளிகள், IRCTC வழங்கும் இந்த சிறப்பு தள்ளுபடி மூலம் பயனடையலாம்.
பாதுகாப்பு அம்சங்கள்:
IRCTC ஆனது சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை அதிக போட்டி விலையில் முன்பதிவு செய்வதற்கு வசதியாக IATA- சான்றளிக்கப்பட்ட இணையதளத்தை (www.air.irctc.co.in) நிறுவியுள்ளது. இந்த தளம் வாடிக்கையாளர்கள் குறைந்த செலவில் விரும்பிய இருக்கை வசதிகளை தேர்வு செய்து கொள்ளும் வகையிலான ஆப்ஷனைகளை வழங்குகின்றது. ஐஆர்சிடிசியின் போர்ட்டல் மூலம் முன்பதிவு செய்யப்படும் ஒவ்வொரு விமான டிக்கெட்டும், ரூ.50 லட்சம் பயணக் காப்பீட்டுத் தொகையுடன் வருகிறது. இது முன்பதிவு செயல்முறைக்கு குறிப்பிடத்தக்க மதிப்பைச் சேர்க்கிறது.
ரயில்வேதுறை:
இந்தியர்களின் பயணத்தில் ரயில்சேவை என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. அதனை மேலும் மேம்படுத்தும் விதமாக தான், ஐ.ஆர்.சி.டி.சி சேவை தொடங்கப்பட்டது. இந்த இணையதளம் மற்றும் செயலி மூலம், சுற்றுலா மற்றும் பயண திட்டங்களுக்கான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. ரயில்களுக்கான டிக்கெட் மட்டுமின்றி, விமானங்களுக்கான டிக்கெட்டுகளையும் விற்று வழங்கி வருகிறது. அந்த சேவைகளுக்கான கட்டணத்தையும் வசூலித்து வருகிறது. இந்நிலையில் தான், உலக சுற்றுலா தினம் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. தோற்றுவிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, விமான டிக்கெட் முன்பதிவிற்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.