Stock Market Update: சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை வீழ்ச்சி!
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை:
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 103.88 அல்லது 0.16% புள்ளிகள் குறைந்து 66,332.59 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 26.50 அல்லது 0.130 % புள்ளிகள் குறைந்த 19,647.80 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின. கடந்த வாரம் முழுக்க சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவை சந்தித்தது. வார இறுதி நாளில் பங்குச்சந்தை சரிவிலிருந்து மீண்டது. இந்த வாரமும் சரிவுடன் தொடங்க வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே நிபுணர்கள் தெரிவித்திருந்ததனர்.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ, டாட்டா கான்ஸ், யு.பி.எல்.,ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டைட்டன் கம்பெனி, கோடாக் மஹிந்திரா, க்ரேசியம். டாடா ஸ்டீல், சிலா, டாடா மோட்டர்ஸ், ஹெச்.டி.எஃப்.சி., டிவி லேப்ஸ், அப்பல்லோ மருத்துவமனை உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
லார்சன், இன்ஃபோசிஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, ஹீரோ மோட்டர்கார்ப், ஐ.டி.சி., விப்ரோ, பவர்கிரிட் கார்ப், பாரதி ஏர்டெல்,ம் ஆக்சிஸ் வங்கி, ஹிண்டால்கோ, அதானி எண்டர்பிரைசிஸ், பிரிட்டானியா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி. ரிலைஒயன்ஸ், கோல் இந்தியா,அதானி போர்ட்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து 83.04 ஆக இருந்தது.
கடந்த மூன்று நாட்களாக செக்சென்ஸ் 1600 புள்ளிகள் சரிந்தது. இதனால் டாடால் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் ரூ.5.4 லட்சம் கோடி மதிப்பில் இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க..
வயநாட்டுல இல்லாம, ஹைதராபாத்துல போட்டியிடுங்க பார்ப்போம்’.. ராகுல் காந்திக்கு சவால்விட்ட ஒவைசி!