Womens Day 2023: சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்: பெண் ஊழியர்களுக்கு விடுமுறை; தெலங்கானா அரசு அறிவிப்பு!
Womens Day 2023: தெலங்கானாவில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் அன்றைய தினம் (மார்ச்,8) விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு தெலங்கானாவில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் அன்றைய தினம் (மார்ச்,8) விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச உழைக்கும் தினம் வரும் புதன்கிழமை (மார்ச்,08,) கொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பல்வேறு துறைகளில் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். தெலங்கானாவில் மகளிர் தினத்தன்று பெண்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தலைமை செயலர் சாந்தி குமாரி உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மகளிர் தினம்
மகளிர் தினம் 2023, மார்ச் 8 ஆம் தேதி, "டிஜிட்டல்: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்" என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பல சமயங்களில் பெண் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளுகிறார்கள். பெண்களுக்கு சம உரிமை, முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
"குழந்தைப் பேறு சமயத்தில் பெண்கள் பட வேண்டியுள்ள வேதனைகளை ஆண்கள் படவேண்டியிருந்தால் அவர்களில் யாரும் வாழ்நாளில் ஒரு முறைக்குமேல் குழந்தை பெற இணங்க மாட்டார்கள்" - அம்பேத்கர்.
"அன்பு கொண்ட பெண்ணிடம் காதல் கொள்வது
ஒரு மனிதனை மீண்டும் மனிதனாக்குகிறது; ஜென்னி போல் ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன்" - கார்ல் மார்க்ஸ்
''பெண்கள் அணு அளவு அடக்குமுறைக்கு ஆளானாலும் இந்தியா உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியாது'' - காந்தி
‘முடிவுகள் எடுக்கப்படும் எல்லா இடங்களிலும் பெண்கள் உள்ளனர். பெண்கள் விதிவிலக்காக இருக்கக்கூடாது’ - ரூத் பேடர் கின்ஸ்பர்க், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் இணை நீதிபதி.
‘இந்த உலகத்தை அனைத்து மக்களும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான சிறந்த இடமாக மாற்ற, வாழவும், வளரவும், எங்களால் முடிந்ததைச் செய்யவும் இந்த பூமியில் நாங்கள் இருக்கிறோம் என்று இன்றுவரை நான் நம்புகிறேன்’ - அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ரோசா பார்க்ஸ்.
‘எந்தவொரு நாடும் அதன் பெண்களின் திறனை முடக்கி, அதன் குடிமக்களின் பாதி பங்களிப்பை இழந்தால், செழிக்க முடியாது’ மிச்செல் ஒபாமா, அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி.
‘ஆண்களுக்கு இணையாக பெண்கள் பங்கேற்காமல் எந்தப் போராட்டமும் வெற்றிபெற முடியாது’ - பாகிஸ்தான் ஆர்வலர் மலாலா யூசுப்சாய்.