உலக நாடுகளை அலறவிடும் ஐஎன்எஸ் சந்தயாக்.. மலேசியாவுடன் கைகோர்க்கும் இந்தியா
இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட சந்தயாக் ஆய்வுக் கப்பல், கடந்த 2024ஆம் ஆண்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட பெரிய ஆய்வுக் கப்பலான (சர்வே வெசல் லார்ஜ் - எஸ்விஎல் - SVL) ஐஎன்எஸ் சந்தயாக், கடந்த ஜூலை 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மலேசியாவின் கிளாங்க் துறைமுகத்திற்குச் (கிள்ளான் துறைமுகம்) சென்றுள்ளது.
உலக நாடுகளை அலறவிடும் ஐஎன்எஸ் சந்தயாக்:
இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்புக்காக முதல் துறைமுக பயணத்தை இந்தக் கப்பல் மேற்கொண்டுள்ளது. இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட சந்தயாக் ஆய்வுக் கப்பல், கடந்த 2024ஆம் ஆண்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்தக் கப்பல் முழு அளவிலான கடலோர மற்றும் ஆழ்கடல் ஆய்வு திறன், கடல்சார் தரவு சேகரிப்பு, ஹெலிகாப்டர் செயல்பாடுகள், மருத்துவமனை செயல்பாடுகள், தேடல், மீட்பு, மனிதாபிமான நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
Indian Navy's indigenously designed and constructed Survey Vessel Large (SVL) INS Sandhayak made her maiden port call at Port Klang, Malaysia, for hydrographic cooperation, from 16-19 July, 2025
— PIB India (@PIB_India) July 19, 2025
This visit demonstrates India’s growing role in regional hydrographic capacity… pic.twitter.com/TTpF0AygcC
மலேசியாவுடன் கைகோர்க்கும் இந்தியா:
கிளாங்க் (கிள்ளான்) துறைமுகத்திற்கு இந்தக் கப்பலின் முதல் பயணம், தொழில்நுட்ப பரிமாற்றங்களை எளிதாக்குவது, ஆய்வுத் தொழில்நுட்பங்களைப் பகிர்வது போன்றவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பயணம், பிராந்திய கடல்சார் ஒத்துழைப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைக்கிறது.
#INSSandhayak, the first of class - indigenously designed and constructed, hydrographic survey ship visited Port Klang, #Malaysia, 16 - 19 Jul 25.
— SpokespersonNavy (@indiannavy) July 19, 2025
This maiden Port Call by the ship was aimed at strengthening 🇮🇳-🇲🇾 hydrographic cooperation.
A step forward in #India’s regional… https://t.co/gZg9trJgW4 pic.twitter.com/x15T6hdEoX





















