அதிமுக இரட்டை தலைமைக்கு தேர்தல் ஆணையம் கடிதம்.. ஏன்? எதற்கு? முழு விவரம்..
ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் தொடர்பாக ஓ. பன்னீர்ச்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு சத்ய பிரதா சாகு அழைப்பு விடுத்துள்ளார்.
ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் தொடர்பாக ஓ. பன்னீர்ச்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு சத்ய பிரதா சாகு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனவரி 14ஆம் தேதி கட்சி பிரதிநிதிகளுக்கு ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றிய செயல்முறை விளக்கமும் கருத்து கேட்பு தொடர்பாகவும் கூட்டம் நடக்க உள்ளது. ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் பல்வேறு கட்சியினருக்கு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று தே.மு.தி.க, தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிக்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி தேர்தல் ஆணையத்தின் கடிதத்தின் படி தமிழ்நாடு முதன்மை தேர்தல் அதிகாரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதம் அனுப்பி உள்ளார். ஆக 29.12.2022 தேர்தல் ஆணைய பட்டியலின்படி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற அதிகார தரவரிசை தான் இருக்கிறது என தெரிய வந்துள்ளது.
இதற்கு முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சமர்பித்த வரவு செலவு கணக்குகளை அதன் இணைய தளத்தில் டிசம்பர் 21ஆம் தேதி பதிவு செய்தது.
செப்டம்பர் 29ஆம் தேதி இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி சமர்பித்த வரவு செலவு கணக்குகளை ஏற்று தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தது. கட்சியின் வருமான வரி செலவும் பழனிச்சாமி பெயரிலே செலுத்தப்பட்டு அதன் நகலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என குறிப்பிட்டு அனுப்பப்பட்ட 2021-22 நிதியாண்டு ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் இன்று இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மேலும் குழப்பம் நீடிக்கிறது.