இதய ஆரோக்கியம் காக்கும் பூசணி விதைகள்!

Published by: ஜான்சி ராணி

நீர்ச்சத்து அதிமுள்ள காயின் விதைகளும் ஏராளமான மருத்த்துவ குணங்களை கொண்டுள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் உனவிலும் பூசணி விதைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதை சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளை பெறலாம்.

பூசணி விதைகளில் மெக்னீசியம், துத்தநாகம், போன்ற பிற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு அத்தியாவசிய தாதுக்கள் இருப்பதால் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

அதிக மெக்னீசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தி சீராக வைத்திருக்க உதவுகிறது.

பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம் நோயெதிர்ப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் தொற்று மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

பூசணி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. 

பூசணி விதைகளில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது.  இது அனைவருக்கும் சிறந்த தூக்கம் மற்றும் மனநிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

அதிக நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.