Promotion for Abhinandan: வீரதீர அபினந்தனுக்கு பதவி உயர்வு: க்ரூப் கேப்டனாக பொறுப்பு!
பைலட் விங் கமாண்டராக இருந்த அவர், க்ரூப் கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி இந்திய இராணுவத்தில் கர்னல் பதவிக்கு சமமானது.
2019 புல்வாமா தாக்குதலில் கவனிக்க வைத்த விமானப்படை விமானி அபினந்தன் முகுந்தனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பைலட் விங் கமாண்டராக இருந்த அவர், க்ரூப் கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி இந்திய இராணுவத்தில் கர்னல் பதவிக்கு சமமானது.
கடந்த 2019-ம் ஆண்டு புல்மாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 40 வீரர்கள் மாண்டனர். அதனை தொடர்ந்து, அதே ஆண்டு பாலக்கோட்டில் நடைபெற்ற தாக்குதலில், இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கினர். அந்த தாக்குதலின்போது இந்திய விமானப்படை விமானி அபினந்தன் முகுந்தன் பாகிஸ்தானிடம் பிடிப்பட்டார். பாகிஸ்தான் இராணுவத்தால் பிடிபட்டு இந்தியா திரும்பிய அவருக்கு விர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
Indian Air Force promotes Balakot air strike hero Abhinandan to Group Captain rank
— ANI Digital (@ani_digital) November 3, 2021
Read @ANI Story | https://t.co/3cTaQbrpKa#Balakot #IAF pic.twitter.com/punXjzqWJz
ஜெய்பீம் தொடர்பான முக்கியச் செய்திகள் சில...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்