India Pakistan Tension: போராக கருதப்படும்.. இந்தியாவின் அறிவிப்பால் பயத்தில் பாகிஸ்தான்
எதிர்காலத்தில் இந்தியா மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் போராக கருதப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் தீவிரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி நடத்திய தாக்குதல் ஒட்டுமொத்த இந்தியாவையும் துயரத்திலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா தாக்கதலைத் தொடங்கியது.
பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை:
பாகிஸ்தானின் உள்ளே புகுந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களில் பாகிஸ்தான் தாக்குதலை நடத்த முயற்சித்தது. இதையடுத்து, இந்தியா பாகிஸ்தானின் கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர் ஆகிய இடங்களில் தாக்குதலை நடத்தியது.
போராக கருதப்படும்:
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, எதிர்காலங்களில் இந்தியா மீது நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல் போராகவே கருதப்படும் என்று எச்சரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
India has decided that any future act of terror will be considered an Act of War against India and will be responded accordingly: Top GoI sources pic.twitter.com/zZSAXzu3o6
— ANI (@ANI) May 10, 2025
இந்தியா மீது நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல் மற்றும் எல்லையில் அவ்வப்போது நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்தியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடரும் மோதல்:
இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆபரேஷன் பன்யன் உன் மர்சூஸ் என்ற தாக்குதலை நடத்தியது. இரு நாடுகளும் தொடர்ச்சியாக மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் எல்லை பகுதிகள் மிகுந்த பதற்றத்துடன் காணப்படுகிறது. காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய இடங்களில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருவது மட்டுமின்றி எதிர்தாககுதலை சமாளிக்கும் வகையிலும் ஆயத்தமாக உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் மோதல் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் எல்லையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.





















