மேலும் அறிய

India’s Population: சீனாவை பின்னுக்குத்தள்ளி மக்கள் தொகையில் இந்தியா முதலிடமா..? வெளியானது பரபரப்புத் தகவல்..

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக ஏற்கனவே சீனாவை பின்னுக்குதள்ளி இந்தியா  முந்தியிருக்கலாம் என ப்ளூம்பெர்க் என்ற அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக ஏற்கனவே சீனாவை பின்னுக்குதள்ளி இந்தியா  முந்தியிருக்கலாம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை மதிப்பீட்டின் மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் என்ற அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

அமைப்பின் மதிப்பீட்டின்படி, கடந்த 2022ம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் மக்கள் தொகை 1.417 பில்லியனாக இருந்தது. 1960 களில் இருந்து பெய்ஜிங் மக்கள்தொகை எண்ணிக்கையில் முதல் சரிவை அறிவித்தபோது சீனாவால் அறிவிக்கப்பட்ட 1.412 பில்லியனை விட இது 5 மில்லியன் அதிகமாகும். இருப்பினும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியா இந்த மைல்கல்லை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கிறது.

மேக்ரோட்ரெண்ட்ஸ் என்ற ஆராய்ச்சி தளத்தின் மற்றொரு மதிப்பீட்டின்படி, இந்தியாவின் மக்கள்தொகை 1.428 பில்லியன் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்திருந்தாலும், குறைந்தபட்சம் 2050 வரை இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று உலக மக்கள்தொகை மதிப்பாய்வு தெரிவித்துள்ளது.

மறுபுறம், தேசிய புள்ளியியல் பணியகம் வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் மக்கள்தொகை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 2022 இல் 850,000 ஆக குறைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அதன் மதிப்பீட்டில், 2022 மற்றும் 2050 க்கு இடையில் உலக மக்கள்தொகை அதிகரிப்பு காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய எட்டு நாடுகளில் இருக்கும் என்று தெரிவித்தது. 

60 ஆண்டுகளில் இல்லாத சரிவு:

இந்நிலையில் தான், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன் முறையாக சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது. சீன தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ”சீனாவில் 1961 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2022 ஆம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் சீன மக்கள் தொகை எண்ணிக்கை 1.41260 பில்லியன் ஆக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் முடிவில் சீனாவின் மக்கள் தொகை 1.41178 பில்லியன் ஆக குறைந்து உள்ளது”.

சீன அரசு தீவிரம்:

ஒரு கட்டத்தில் அதிவேகமாக வளர்ந்த மக்கள் தொகை காரணமாக, குடும்பத்திற்கு ஒரு குழந்தை மட்டுமே எனும் கடுமையான விதியை சீன அரசு கொண்டு வந்தது. இதன் காரணமாக பொருளாதாரத்தில் முதலிடத்தை அடைவதற்கு முன்பே, அதிக வயதானோர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக, 2016 -ம் ஆண்டிலேயே "ஒரு குழந்தை கொள்கையை" சீன அரசு தளர்த்திக் கொண்டதோடு,  கடந்த ஆண்டு முதல் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெறவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும்,  கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்து வருகிறது.

பல்வேறு சலுகைகள் அறிவிப்பு:

இதனால் சீனாவின் மாநில அரசுகள் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. வரி விலக்குகள், நீண்ட மகப்பேறு விடுப்பு மற்றும் வீட்டு மானியங்கள் உட்படப் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அதிகபட்ச வரம்பை விட 20 சதவீதம் அதிகமாக கடன் வாங்க முடியும் என்று சீனாவின் ஹாங்சோ மாகாணம் அறிவித்துள்ளது. நான்சாங் மற்றும் சாங்ஷா மாகாணங்களும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு சலுகை திட்டங்களை உருவாக்கியுள்ளன. ஆனாலும்,  இந்த நடவடிக்கைகள் நீண்ட காலப் போக்கை உடனடியாக மாற்றாது என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளை மறுநாள் உருவாகும் புயல்.. தயார் நிலையில் NDRF.. டெல்லியில் முக்கிய மீட்டிங்!
நாளை மறுநாள் உருவாகும் புயல்.. தயார் நிலையில் NDRF.. டெல்லியில் முக்கிய மீட்டிங்!
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு அதிரடி!
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழ்நாடு அரசு அதிரடி!
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்”  - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Manadu : கார் பார்கிங்கில் தேங்கிய மழைநீர்!அடாவடி செய்யும் பவுன்சர்கள் நடக்குமா தவெக மாநாடு?Irfan baby Delivery Video : மீண்டும்..மீண்டுமா?தொப்புள்கொடி வெட்டும் வீடியோ அடுத்த சர்ச்சையில் இர்ஃபான்!Bus Accident : FULL SPEED-ல் வந்த பேருந்து ஒன்றோடு ஓன்று மோதி விபத்து பதறவைக்கும் CCTV காட்சி SalemVijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை மறுநாள் உருவாகும் புயல்.. தயார் நிலையில் NDRF.. டெல்லியில் முக்கிய மீட்டிங்!
நாளை மறுநாள் உருவாகும் புயல்.. தயார் நிலையில் NDRF.. டெல்லியில் முக்கிய மீட்டிங்!
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு அதிரடி!
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழ்நாடு அரசு அதிரடி!
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்”  - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மெரினாவில் ரகளை.. போலீசை தகாத வார்த்தை சொல்லி திட்டிய ஜோடி.. தட்டி தூக்கிய காவல்துறை! 
மெரினாவில் ரகளை.. போலீசை தகாத வார்த்தை சொல்லி திட்டிய ஜோடி.. தட்டி தூக்கிய காவல்துறை! 
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Embed widget