மேலும் அறிய

இந்தியாவில் முதல்முறையாக அலுமினிய சரக்கு ரயில் பெட்டி அறிமுகம்

அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் ஐ.டி துறை செயலற்று இருந்தது. அது குறித்து யாருடனாலும் விவாதம் செய்ய நான் தயார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்பொழுது உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதிவேக வந்தே பாரத் ரயில் தமிழகத்தில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவனம், இந்துஸ்தான் அலுமினியம் கார்ப்பரேஷன், பாரத் எலக்ட்ரிக் இரும்பு நிறுவனம் ஆகியவை இணைந்து எடை குறைந்த அலுமினிய சரக்கு ரயில் பெட்டியை தயாரித்து உள்ளன.

இந்த ரயில் பெட்டிகள் திறந்த நிலையில் உள்ள ரயில் பெட்டிகளாகும். இதில் நிலக்கரி, சரளை கற்கள், இரும்பு தளவாட பொருட்கள் போன்றவற்றை அனுப்ப முடியும். இந்த ரயில் பெட்டிகள் பற்றவைப்பு இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டி தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில் பெட்டியை விட 3.25 டன் எடை குறைவானதாகும். மேலும் தற்போதைய ரயில் பெட்டிகளை காட்டிலும் 180 டன் அதிகமாக சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். எடை குறைவாக இருப்பதால் காலி பெட்டிகள் திரும்பி செல்லும் போது எரிபொருள் நுகர்வு குறைவாக இருக்கும். இதன் மூலம் ஒரு ரயில் பெட்டி தொடர் 14,500 டன்கள் கரியமல வாயு வெளியேற்றத்தை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும்.

இந்தியாவில் முதல்முறையாக அலுமினிய சரக்கு ரயில் பெட்டி அறிமுகம்
இந்த ரயில் பெட்டிகளை 80 சதவீதம் மறு விற்பனைக்கு உட்படுத்தலாம். துரு பிடிக்காது என்பதால் பராமரிப்பு செலவு குறைவு. தற்போதைய இரும்பு சரக்கு பெட்டிகள் தயாரிக்க நிக்கல், காட்மியம் போன்ற மூலப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது. இந்த புதிய முயற்சி இறக்குமதியை குறைத்து அன்னிய செலவாணியை சேமிக்கிறது.

இந்தியாவில் முதல்முறையாக அலுமினிய சரக்கு ரயில் பெட்டி அறிமுகம்
 
மேலும் உள்ளூர் அலுமினிய தொழிற்சாலைகள்  வளர்ச்சி பெறும். பல சிறப்புகள் பெற்ற இந்த சரக்கு ரயில் பெட்டிகள் தொடர் நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வரர் ரயில் நிலையத்திலிருந்து சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூருக்கு அனுப்பப்பட்டது. இந்த புதிய அலுமினியம் ரயில் பெட்டி சேவையை புவனேஸ்வரில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் துவக்கி வைத்தார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
ரெப்போ விகித உயர்வு! FD-யில் அதிக வட்டி லாபம்? முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்!
ரெப்போ விகித உயர்வு! FD-யில் அதிக வட்டி லாபம்? முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்!
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
25 Years of Modi: மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... இணையத்தில் குவியும் வாழ்த்து!
25 Years of Modi: மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... இணையத்தில் குவியும் வாழ்த்து!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget