Coronavirus LIVE Updates : தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, 1859 பேருக்கு பாதிப்பு!
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE

Background
தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, 1859 பேருக்கு பாதிப்பு!
தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 1859 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இறங்குமுகமாக 1756 பேருக்கு மட்டும் பாதிப்பு இருந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 28 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 1,756 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 756 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,55,997 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,756 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 53 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரத்து 756 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 164 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 164 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 29 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,995 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் மேலும் 22,056 பேருக்கு கொரோனா
கேரள மாநிலத்தில் மேலும் 22,056 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 131 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
corona prevention: பண்டிகைகள் - கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை
பண்டிகை காலம் நெருங்குவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் அவசியம் தேவை என்று அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
corona vaccine: தனியார் மருத்துவமனையில் இலவச கொரோனா தடுப்பூசி
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

