முஸ்லிம்களே.. ஹஜ் பயணம் போறீங்களா? உங்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கவலையை விடுங்க
சவுதி அரேபிய அரசிடம் பேசி, மெக்கா, மெதினாவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசக்கு தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதன் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஹஜ் புனித பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஹஜ் பயணம் செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபிய அரசிடம் பேசி, மெக்கா, மெதினாவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசக்கு தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதன் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு ஹேப்பி நியூஸ்!
இஸ்லாமியர்களுக்கு ஐந்து கடமைகள் இருக்கின்றன. அவை, முகமது நபியே கடவுளின் ஒரே இறைத்தூதர் என நம்புவது, ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகை செய்வது, மற்றவர்களுக்கு உதவி செய்வது, ரமலான் மாதத்தில் புனித நோன்பு இருப்பது, ஹஜ் பயணம் மேற்கொள்வது.
அதில், ஹஜ் பயணம் மேற்கொள்வது ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டியின்படி, துல் ஹிஜ்ஜா மாதத்தில் உலகின் பல பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள், சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வர். பொதுவாக, இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள், மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஹஜ் கமிட்டி மூலமாகவோ அல்லது தனியார் சுற்றுலா ஆபரேட்டர் மூலமாகவோ ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம்.
சமீபத்தில், தனியார் சுற்றுலா ஆபரேட்டர் மூலம் ஹஜ் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
முதல்வர்கள் ஸ்டாலின், உமர் அப்துல்லா எழுப்பிய பிரச்னை:
இந்த நிலையில், மெக்கா, மெதினாவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு, 1 லட்சத்து 36 ஆயிரத்து 020 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இந்தாண்டு, அந்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 025 பேராக உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய முஸ்லிம்களுக்கான ஹஜ் யாத்திரையை எளிதாக்குவதற்கு இந்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக, இந்தியாவின் ஹஜ் ஒதுக்கீடு 2014 இல் 136,020 இலிருந்து 2025 இல் 175,025 ஆக உயர்ந்துள்ளது. இது சவுதி அதிகாரிகளால் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஹஜ் கமிட்டி மூலம் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகம் (MoMA) நடப்பு ஆண்டில் பிரதான ஒதுக்கீட்டின் கீழ் 122,518 யாத்ரீகர்களுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. விமானங்கள், போக்குவரத்து வசதி, மினா முகாம்கள், தங்குமிடம் உள்ளிட்ட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சவுதி அரசின் வழிகாட்டுதல்களின்படி முடிக்கப்பட்டன.
மீதமுள்ள ஒதுக்கீடு, வழக்கம் போல், தனியார் சுற்றுலா ஆபரேட்டர்களுக்கு ஒதுக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட சவுதி விதிமுறைகள் காரணமாக, மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகம் 800+ தனியார் ஆபரேட்டர்களை 26 ஒருங்கிணைந்த ஹஜ் குழு ஆபரேட்டர்களாக (CHGOs) ஒருங்கிணைத்து, அவர்களுக்கு முன்கூட்டியே ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.
ஹஜ் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு:
இருப்பினும், ஒருங்கிணைந்த ஹஜ் குழு ஆபரேட்டர்கள், சவுதி அரசின் காலக்கெடுவை பூர்த்தி செய்யத் தவறிவிட்டன. பலமுறை நினைவூட்டல்கள் வழங்கப்பட்ட போதிலும், மினா முகாம்கள், தங்குமிடம் மற்றும் போக்குவரத்துக்கான தேவையான ஒப்பந்தங்களை இறுதி செய்ய தவறிவிட்டன.
இந்திய அரசு சவுதி அதிகாரிகளுடன் பல மட்டங்களில் தொடர்பு கொண்டது. அமைச்சகம் வழியாகவும் தொடர்பு கொண்டது. சவுதியில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் குறைந்த இடவசதி காரணமாக குறிப்பாக மினாவில் உள்ள யாத்ரீகர்களின் பாதுகாப்பு குறித்து சவுதி ஹஜ் அமைச்சகத்திடம் கவலை எழுப்பியது.
Thanks to the Government’s intervention, the Saudi Haj Ministry has agreed to re-open the Haj (Nusuk) Portal for CHGOs to accommodate 10,000 pilgrims, based on current availability in Mina.
— Ministry of Minority Affairs (@MOMAIndia) April 15, 2025
தாமதங்கள் காரணமாக, மினா முகாம்கள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதாகவும் இந்த ஆண்டு எந்த நாட்டிற்கும் காலக்கெடு நீட்டிப்புகள் வழங்கப்படவில்லை என்றும் சவுதி அரசு எங்களிடம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அரசாங்கத்தின் தலையீட்டின் காரணமாக, மினா முகாம்களில் இடங்கள் இருக்கும் பட்சத்தில், 10,000 யாத்ரீகர்களை தங்க வைக்கும் வகையில், ஒருங்கிணைந்த ஹஜ் குழு ஆபரேட்டர்கள் ஹஜ் (நுசுக்) போர்ட்டலை மீண்டும் திறக்க சவுதி ஹஜ் அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.