Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்குகிறது
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், இன்று (30.07.2021) மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கான தடுப்பூசி போடப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1986 பேருக்குக் கொரோனா, 26 பேர் உயிரிழப்பு!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1986 பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 26 பேர் உயிரிழிந்துள்ளனர். நாளொன்றுக்கான கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் இன்று 1,947 பேருக்கு தொற்று உறுதி
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வந்தது. நேற்றில் இருந்து தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 947 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,56,843 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,947 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 57 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 37 ஆயிரத்து 951 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 215 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 181 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 215 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 27 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,050 ஆக அதிகரித்துள்ளது.




















