India Corona : நாளுக்கு நாள் புதிய உச்சம்...5 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்பு...பீதியில் மக்கள்...!
நாட்டில் கொரோனா பாதிப்பது கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பானது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பது கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பானது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. நேற்று வரை 4,435-ஆக இருந்த கொரோனா பாதிப்பு, இன்று 5,335-ஆக அதிகரித்துள்ளது.
அதிகரிக்கும் கொரோனா
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்த நிலையில், விஞ்ஞான உலகின் தொடர் முயற்சியின் காரணமாக பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
5 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு
இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, இன்று காலை நிலவரப்படி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,335 பேருக்கு புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 4,777 பாதிப்பு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது 5 மாதங்களுக்கு பிறகு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
India records 5,335 new cases of Covid19 in the last 24 hours; Active caseload stands at 25,587
— ANI (@ANI) April 6, 2023
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2,826 பேர் கடந்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4.41 கோடி பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி விகிதம் 3.32 சதவிகிதமாக உள்ளது. பாதிப்புக்குள்ளானர்களின் வார விகிதம் 2.89 சதவிகிதமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.47 கோடியாக உள்ளது.
1.93 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
நேற்யை நிலவரப்படி, இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 916ஆக இருந்தது. நேற்று கொரோனா பாதிப்பிற்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மகாராஷ்டிரா, கேரளாவில் தலா 4 உயிரிழப்புகளும், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளன.
இதுவரை, 92.18 கோடி முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 நேரத்தில் 1.93 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை, 220.65 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
TN Corona Spike: தமிழ்நாட்டில் எகிறும் கொரோனா பாதிப்பு.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதாரத்துறை