India Corona Update : ஒரே நாளில் 5,357 பேருக்கு கொரோனா...இரண்டு நாட்களுக்கு பின் குறைந்தது பாதிப்பு...!
கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 5,357ஆக குறைந்ததுள்ளது.
India Corona Update : கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 5,357ஆக குறைந்ததுள்ளது.
கொரோனா
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. தடுப்பூசிகள் பயன்பாடு மற்றும் விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகள் காரணமாக பெருந்தொற்று ஒரு வழியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாகவே இதன் தாக்கம் குறைவாக இருந்த நிலையில், தற்போது அது மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. நாட்டில் தினசரி பாதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ஐந்து மாநிலங்களில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி, கேரளா, ஹரியானா, உத்தர பிரதேசம், டெல்லியில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கொரோனா பாதிப்பு நிலவரம்
இதற்கிடையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 5,357 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 5,357ஆக குறைந்ததுள்ளது.
Covid-19 | India reports 5,357 new cases in 24 hours; the active caseload stands at 32,814
— ANI (@ANI) April 9, 2023
(Representative Image) pic.twitter.com/zhYhVd3nzM
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 4.41 கோடி பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.47 கோடியாக உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 965ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 32,814-ஆக சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
அதில் குஜராத் மாநிலத்தில் மூன்றும், ஹிமாச்சல் பிரதேசம், பீகார் மாநிலத்தில் தலா இரண்டும், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தர பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இறப்புகளும் பதிவாகி உள்ளன. இதுவரை, 92.18 கோடி முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை, 220.65 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
மேலும் படிக்க
Watch Video: “பந்து தான் அவரை பிடித்தது” .. ஜடேஜா பிடித்த கேட்சை 10 ஆண்டுகளுக்கு முன் கணித்த தோனி..