Breaking News LIVE: ஜார்கண்ட் முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Breaking News LIVE: நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
சென்னையில் 26ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஜார்கண்ட் முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
ஜார்கண்ட் முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது - அரசு சுரங்க ஒப்பந்தத்தை தனக்கு ஆதரவாக பயன்படுத்தியதாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தகுதி நீக்க நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை - மாணவர்களிடம் ஆட்சியர் விசாரணை
சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை விவகாரத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 4 பேரை அழைத்து ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
73 ஆண்டு கால வரலாற்றை கொண்டது திமுக - முதல்வர் ஸ்டாலின்
73 ஆண்டு கால வரலாற்றை கொண்டது திமுக என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
1957 ஆம் ஆண்டு முதலில் திமுக தேர்தல் களத்தை சந்தித்தது - முதல்வர் ஸ்டாலின்
6 ஆவது முறையாக திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்து வெற்றி அடைந்துள்ளது - முதல்வர் ஸ்டாலின்

தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது - உச்சநீதிமன்றம் உத்தரவு
கொரோனா தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.