மேலும் அறிய

Anbumani: யுத்தமா? பாசமா? ராமதாசை தைலாபுரத்தில் சந்திக்கும் அன்புமணி!

பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பால் ஜி. கே மணி தலைமையிலான குழு சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து சமாதானம் பேசிய நிலையில் காலை 11 மணிக்கு டாக்டர் ராமதாசை அன்புமணி சந்திக்கிறார்

பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பால் ஜி. கே மணி தலைமையிலான குழு சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து சமாதானம் பேசிய நிலையில் காலை 11 மணிக்கு  டாக்டர் ராமதாசை அன்புமணி சந்திக்கிறார்.

பாமக கூட்டம்:

பாட்டாளி மக்கள் கட்சியின் "2024க்கு விடை கொடுப்போம் 2025 ஐ வரவேற்போம்" புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. முதலாவதாக பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கபட்டு, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் தீர்மானம் வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ராமதாஸ் பேச்சு:

நிறைவாக பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தன் பேரன் முகுந்தன் பரசுராமனை மாநில இளைஞர் சங்கத் தலைவராக அறிவித்து, அன்புமணிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸ், “யார்... எனக்கா...?” என்றார். அதற்கு ராமதாஸ் “ஆமாம்” என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு தொடங்கியது.

இதையும் படிங்க: PMK: "கட்சியை விட்டு போ": வார்த்தையை விட்ட ராமதாஸ்: மைக்கை கீழே போட்ட அன்புமணி..உடையும் பாமக?

எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி:

அப்போது அன்புமணி, "எனக்கெல்லாம் வேண்டாம்.. அவன் இப்போது தான் கட்சிக்கு வந்து நான்கு மாதம் ஆகிறது. உடனடியாக அவருக்கு இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பு என்றால், அவனுக்கு என்ன அனுபவம் இருக்கு? நல்ல அனுபவசாலிக்கு அந்தப் பொறுப்பைக் கொடுங்கள். முகுந்தன் பரசுராமனுக்கு வேறு ஏதாவது பதவி கொடுங்கள். இப்போது பேசும் போது கூட நான் அதைத்தான் கூறினேன். களத்தில் நல்ல ஆட்கள், திறமையானவர்கள் வேண்டும் என்று பேசினேன். வந்த உடனே இளைஞர் சங்க பொறுப்பைக் கொடுத்துக்கிட்டு" என்று ஆவேசமாக பேசினார். உடனே கீழே இருந்த பாமக நிர்வாகிகள் முகுந்தனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேடையிலேயே வாக்குவாதம் :

அதற்கு ராமதாஸ், “யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லையென்றால், யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்க முடியாவிட்டால், யாரும் இனி இந்த கட்சியில இருக்க முடியாது, என்றார். அதற்கு அன்புமணி, “அது சரி” என்றார். அப்போது ராமதாஸ், 'என்ன சரி, சரி என்றால் போ அப்போ' என்றார்.

இதையும் படிங்க: சித்திரா பௌர்ணமியை தேர்வு செய்த மருத்துவர் ராமதாஸ் ; எதற்கு தெரியுமா?

பின்னர் மருத்துவர் ராமதாஸ், முகுந்தனை பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்படுகிறார்,” என்று அறிவித்தார். அதற்கு அன்புமணி, “குடும்பத்தில் இருந்து இன்னொருவரை தூக்கிப் போடுங்கள்,” என்று கூறி, கையில் இருந்த மைக்கை மேஜை மீது எறிந்தார். பின்னர் பேசிய அவர், சென்னை பனையூரில், மூன்றாவது தெருவில் நான் புதிதாக அலுவலகம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். அங்கு வந்து அனைவரும் என்னைப் பார்க்கலாம்” என்று கூறி தொலைப்பேசி எண்ணை அறிவித்து, இந்த எண்ணை குறித்து கொள்ளுங்கள், என்னைத் தொடர்பு கொண்டு அனைவரும் வந்து எப்போது வேண்டும் என்றாலும், என்னை வந்து பார்க்கலாம் என தெரிவித்தார்.

பரப்பில் பாமக:

அதற்குள் இடையில் மருத்துவர் ராமதாஸ், மீண்டும் கூறுகிறேன்..உங்களுடைய இளைஞர் சங்கத் தலைவர் முகுந்தன் பரசுராமன். இன்னொரு அலுவலுவகம் கூட திறந்து நடத்திக்கொள். முகுந்தன் உனக்கு உதவியாக இருக்கப்போகிறார். இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லையென்றால், அதற்கு வேறு ஒன்றும் நான் சொல்ல முடியாது என்றார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் எழுந்து சலசலப்பில் ஈடுபட்டனர். அதற்கு ராமதாஸ், நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இது நான் ஆரம்பித்த கட்சி. நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளுங்கள். விருப்பம் இல்லாதவர்கள், என் பேச்சைக் கேட்காதவர்கள் கட்சியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்றார், 

தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை பாமக தலைவர் அன்புமணி

பாமக பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பால் நேற்று மாலை ஜி. கே மணி தலைமையிலான குழு சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து சமாதானம் பேசிய நிலையில் இன்று காலை 11 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை பாமக தலைவர் அன்புமணி சந்திக்கிறார்

 

தலைப்பு செய்திகள்

விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget