வகுப்பறையிலேயே ஆபாச படம், கண்டுபிடித்த மாணவன்- தலையை பிடித்து சுவற்றில் இடித்த கொடூர ஆசிரியர்..!
UP Teacher: உத்தரபிரதேசத்தில் வகுப்பறையிலேயே ஆபாச படம் பார்த்த ஆசிரியர், மாணவரையும் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
UP Teacher: உத்தரபிரதேசத்தில் வகுப்பறையிலேயே ஆபாச படம் பார்த்தோடு,0 மாணவரையும் கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வகுப்பறையில் ஆபாச படம் பார்த்த ஆசிரியர்:
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில், வகுப்பறையில் தான் ஆபாசமான படம் பார்ப்பதைக் கண்ட எட்டு வயது சிறுவனை, பள்ளி ஆசிரியர் ஒருவர் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறையில் இருந்த குல்தீப் யாதவ் எனும் ஆசிரியர், தனது மொபைலில் ஆபாச படம் பார்த்துள்ளார். இதனை அறிந்த மாணவன், சக மாணவர்களுடன் அந்த விவகாரத்தை பகிர்ந்து சிரித்துள்ளார். இதைகண்டு ஆத்திரமடைந்த ஆசிரியர், மாணவரின் தலை முடியை பிடித்து சுவற்றில் ஆவேசமாக இடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, ஆசிரியரை விசாரணைக்காக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாணவரின் பெற்றோர் சொல்வது என்ன?
பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை பேசுகையில், ”யாதவ் வகுப்பறையில் தனது மொபைல் போனில் ஒரு ஆபாச வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தார், அப்போது மாணவர்கள் அவரது செயலைப் பற்றி விவாதித்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். மாணவர்களின் செயலால் ஆத்திரமடைந்த யாதவ், பின்னர் என் மகனைத் துஷ்பிரயோகம் செய்து கொடூரமாகத் தாக்கினார். அவர் என் மகனின் தலைமுடியைப் பிடித்து சுவற்றில் தலையை ஓங்கி இடித்துள்ளார். மேலும் அவரைக் கைத்தடியால் தாக்கினார். என் மகனுக்கு காது உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன. ஆசிரியருக்கு எதிராகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறை விசாரணை:
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை கண்காணிப்பாளர் (கிராமப்புற) கோபிநாத் சோனி தெரிவித்தார். "விசாரணைக்காக ஆசிரியரை காவலில் எடுத்துள்ளோம்" என்றும் விளக்கமளித்தார். வகுப்பறையிலேயே அநாகரீகமான செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பாகவும் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன. உத்தரபிரதேச பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.